Sahih al-Bukhari · 2161 · Tamil
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு)வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்கக் கூடாது என்று எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அத்தியாயம் :
Read something that stays with you.
Tamil
Readings 2161–2190 of 14,990
Page 73
Sahih al-Bukhari · 2161 · Tamil
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு)வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்கக் கூடாது என்று எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அத்தியாயம் :
Sahih al-Bukhari · 2162 · Tamil
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (வெளியிலிருந்து வரும்) வணிகர்களை எதிர்கொண்டு (வழியிலேயே சரக்குகளை) வாங்குவதையும் கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு)வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுப்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். அத்தியாயம் :
Sahih al-Bukhari · 2163 · Tamil
தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ‘‘கிராமத்திலிருந்து வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுத் தரக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதன் பொருள் என்ன?” என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ‘‘இவர் அவருக்கு இடைத்தரகராக…
Sahih al-Bukhari · 2164 · Tamil
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: மடி கனக்கச் செய்யப்பட்ட பிராணியை விலைக்கு வாங்கியவர் (அதைத் திருப்பிக் கொடுப்பதாக இருந்தால்), அத்துடன் ஒரு ஸாஉ (பேரீச்சம்பழம் அல்லது உணவுப் பொருள்) சேர்த்துக் கொடுக்கட்டும். வியாபாரிகளை எதிர்கொண்டு வாங்குவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அத்தியாயம்…
Sahih al-Bukhari · 2165 · Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் வணிகம் செய்து கொண்டிருக்கும்போது, மற்றவர் குறுக்கிட்டு வணிகம் செய்யலாகாது; மேலும், விற்பனைப் பொருட்கள் சந்தைக்கு கொண்டுவந்து இறக்கப்படுவதற்குமுன் (இடையிலேயே) வாங்காதீர்கள். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
Sahih al-Bukhari · 2166 · Tamil
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (வெளியூரிலிருந்து சரக்கு கொண்டுவரும்) வணிகர்களை (ஊருக்குள்) எதிர்கொண்டு அவர்களிடம் உணவுப் பொருட்களை வாங்கிவந்தோம். (அவ்வாறு நாங்கள் வாங்கும்) உணவுப் பொருள் உணவுச் சந்தைக்குக் கொண்டுசெல்லப் படுவதற்குமுன் அதை நாங்கள் விற்கக் கூடாதென நபி (ஸல்) அவர்கள் தடுத்…
Sahih al-Bukhari · 2167 · Tamil
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபித்தோழர்கள் உணவுப் பொருட் களைக் கடைவீதி துவங்கும் இடத்தில் வாங்கி அதே இடத்தில் விற்றுவந்தனர்; ஆகவே, கடைத்தெருவுக்குள் கொண்டு சொல்லாமல் வாங்கிய இடத்திலேயே அவர்கள் விற்கக் கூடாதென அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அத்தியாயம்…
Sahih al-Bukhari · 2168 · Tamil
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (அடிமைப் பெண்ணாயிருந்த) பரீரா (ரலி) என்னிடம் வந்து, ‘‘நான் என் உரிமை யாளர்களிடம், ஆண்டுக்கு ஓர் யிஊ(க்)கியா’ வீதம் (ஒன்பது ஆண்டுகளில்) ஒன்பது யிஊ(க்)கியா’க்கள் செலுத்தி (விடுதலை ஆகி)விடுவதென எழுதிக்கொடுத்துள் ளேன்; எனக்கு நீங்கள் உதவுங்கள்” என்றார். அதற்கு நான், ‘‘உன்…
Sahih al-Bukhari · 2169 · Tamil
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், ஓர் அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கி விடுதலை செய்ய விரும்பினார்கள். அடிமைப் பெண்ணின் உரிமையாளர்கள், யிஇவளுக்கு வாரிசாகும் உரிமை எங்களுக்கே இருக்க வேண்டும்’ என்ற நிபந்தனையின் அடிப் படையில் உமக்கு விற்கிறோம்…
Sahih al-Bukhari · 2170 · Tamil
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: உடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்) தொலி நீக்கப்பட்ட கோதுமைக் குத் தொலி நீக்கப்பட்ட கோதுமையை மாற்றிக்கொள்வது வட்டியாகும். உடனுக்கு டன் அல்லாமல் (தவணை முறையில்) தொலி நீக்கப்படாத கோதுமைக்குத் தொலி நீக்கப்படாத கோதுமையை மாற்றிக் கொள்வது வட்டியாகும். உடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்)…
Sahih al-Bukhari · 2171 · Tamil
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யிமுஸாபனா’ எனும் வியாபாரத்தைத் தடை செய்தார்கள். யிமுஸாபனா’ என்பது, (பேரீச்ச மரத்திலுள்ள உலராத) கனிகளை, (கொய்யப்பட்டு) அளக்கப்பட்ட உலர்ந்த பேரீச்சம் கனிகளுக்குப் பதிலாக (பண்ட மாற்று முறையில்) விற்பதும் (கொடியி லுள்ள) திராட்சைப்…
Sahih al-Bukhari · 2172 · Tamil
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் யிமுஸாபனா’ எனும் வியாபாரத்தைத் தடை செய்தார்கள். யிமுஸாபனா’ என்பது, மரத்திலுள்ள பேரீச்சம் பழத்தை முகத்தலளவையில் (அளக்கப்பட்ட உலர்ந்த பேரீச்சம் பழத்திற்கு) விற்கும்போது, ‘அது அதிகமாக இருந்தால் அது என்னைச் சேர்ந்தது; அது குறைந்தாலும் என்னைச் சேர்ந்தது’…
Sahih al-Bukhari · 2173 · Tamil
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் யிமுஸாபனா’ எனும் வியாபாரத்தைத் தடை செய்தார்கள். யிமுஸாபனா’ என்பது, மரத்திலுள்ள பேரீச்சம் பழத்தை முகத்தலளவையில் (அளக்கப்பட்ட உலர்ந்த பேரீச்சம் பழத்திற்கு) விற்கும்போது, ‘அது அதிகமாக இருந்தால் அது என்னைச் சேர்ந்தது; அது குறைந்தாலும் என்னைச் சேர்ந்தது’…
Sahih al-Bukhari · 2174 · Tamil
மாலிக் பின் அவ்ஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நூறு பொற்காசுகளை (வெள்ளிக் காசுகளாக) மாற்றித் தருமாறு கேட்டேன். தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் என்னை அழைத்தார்கள். நாங்கள் விலை குறித்துப் பேசினோம். இறுதியில் எனக்கு நாணயமாற்றுச் செய்ய அவர்கள் முன்வந்தார்கள். (என்னிடமிருந்து) பொற்காசுகளைப் பெற்று…
Sahih al-Bukhari · 2175 · Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சரிக்குச் சரியாகவே தவிர (வேறு முறையில்), தங்கத்திற்குத் தங்கத்தை விற்காதீர்கள்! சரிக்குச் சரியாகவே தவிர (வேறு முறையில்), வெள்ளிக்கு வெள்ளியை விற்காதீர்கள்! தங்கத்திற்கு வெள்ளியையும், வெள்ளிக்குத் தங்கத்தை யும் விரும்பியவாறு விற்றுக்கொள் ளுங்கள். இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.…
Sahih al-Bukhari · 2176 · Tamil
சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (இதற்குமுன் 2174ஆவது ஹதீஸில் உமர் (ரலி) அவர்கள் அறிவித்த) அந்த ஹதீஸைப் போன்று ஒரு ஹதீஸை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுக்கு அறிவித்தார்கள். பின்னர் (ஒரு…
Sahih al-Bukhari · 2177 · Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (எடையில்) சரிக்குச் சரியாகவே தவிர (வேறு முறையில்), தங்கத்திற்குத் தங்கத்தை விற்காதீர்கள்! அவற்றில் ஒன்றைவிட மற்றொன்றைக் கூட்டி(யோ குறைத்தோ) விடாதீர்கள்! சரிக்குச் சரியாகவே தவிர, வெள்ளிக்கு வெள்ளியை விற்காதீர்கள்! அவற்றில் ஒன்றைவிட மற்றொன்றைக் கூட்டி(யோ, குறைத்தோ)விடாதீர்கள்! அவற்றில் ஒன்று ரொக்கமாகவும்…
Sahih al-Bukhari · 2178 · Tamil
அபூஸாலிஹ் தக்வான் அஸ்ஸய்யாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள், ‘‘தங்க நாணயத்திற்குத் தங்க நாணயத்தையும் வெள்ளி நாணயத்திற்கு வெள்ளி நாணயத்தையும் (சரிக்குச் சமமாக மட்டுமே) விற்கலாம்!” என்று கூறியதை நான் செவியுற்றேன். அப்போது அவர்களிடம் நான், ‘‘இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இவ்வாறு…
Sahih al-Bukhari · 2179 · Tamil
அபூஸாலிஹ் தக்வான் அஸ்ஸய்யாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள், ‘‘தங்க நாணயத்திற்குத் தங்க நாணயத்தையும் வெள்ளி நாணயத்திற்கு வெள்ளி நாணயத்தையும் (சரிக்குச் சமமாக மட்டுமே) விற்கலாம்!” என்று கூறியதை நான் செவியுற்றேன். அப்போது அவர்களிடம் நான், ‘‘இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இவ்வாறு…
Sahih al-Bukhari · 2180 · Tamil
அபுல்மின்ஹால் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் பராஉ பின் ஆஸிப் (ரலி), ஸைத் பின் அர்கம் (ரலி) ஆகியோரிடம் நாணயமாற்று பற்றிக் கேட்டேன். அப்போது அவ்விருவரில் ஒவ்வொருவரும் (மற்றறவர் குறித்து) ‘‘இவர் என்னைவிடச் சிறந்தவர்” என்று சொல்லிக்கொண்டனர். பிறகு இருவருமே, ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடனாக…
Sahih al-Bukhari · 2181 · Tamil
அபுல்மின்ஹால் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் பராஉ பின் ஆஸிப் (ரலி), ஸைத் பின் அர்கம் (ரலி) ஆகியோரிடம் நாணயமாற்று பற்றிக் கேட்டேன். அப்போது அவ்விருவரில் ஒவ்வொருவரும் (மற்றறவர் குறித்து) ‘‘இவர் என்னைவிடச் சிறந்தவர்” என்று சொல்லிக்கொண்டனர். பிறகு இருவருமே, ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடனாக…
Sahih al-Bukhari · 2182 · Tamil
அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கு வெள்ளியை, தங்கத்திற்குத் தங்கத்தைச் சரிக்குச் சரியாகத் தவிர (வேறு விதமாக) விற்கக் கூடாது என்று தடை விதித்தார்கள். (ஆனால்,) வெள்ளியைத் தங்கத்திற்கு நாங்கள் விரும்பியவாறு விற்பதற்கும் தங்கத்தை வெள்ளிக்கு நாங்கள் விரும்பியவாறு விற்பதற்கும் அனுமதித்தார்கள்.66 அத்தியாயம்…
Sahih al-Bukhari · 2183 · Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மரத்திலுள்ள கனிகள் பலன் உறுதிப் படும் நிலையை அடையாத வரை அவற்றை நீங்கள் விற்க வேண்டாம்! மேலும், உலர்ந்த (கொய்யப்பட்ட) கனி களுக்குப் பதிலாக (மரத்திலுள்ள) உலராத கனிகளை விற்க வேண்டாம். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்…
Sahih al-Bukhari · 2184 · Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மரத்திலுள்ள கனிகள் பலன் உறுதிப் படும் நிலையை அடையாத வரை அவற்றை நீங்கள் விற்க வேண்டாம்! மேலும், உலர்ந்த (கொய்யப்பட்ட) கனி களுக்குப் பதிலாக (மரத்திலுள்ள) உலராத கனிகளை விற்க வேண்டாம். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்…
Sahih al-Bukhari · 2185 · Tamil
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸாபனாவைத் தடை செய்தார்கள். யிமுஸாபனா’ என்பது (மரத்திலுள்ள) உலராத பேரீச்சங்கனிகளை (பறிக்கப்பட்ட) உலர்ந்த பேரீச்சம்பழங்களுக்கு முகத்தலளவையில் விற்பதும் கொடியிலுள்ள திராட்சையை உலர்ந்த திராட்சைக்கு முகத்தலளவையில் விற்பதும் ஆகும். அத்தியாயம் :
Sahih al-Bukhari · 2186 · Tamil
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யிமுஸாபனா, முஹாகலா’ ஆகிய வியாபாரங்களைத் தடை செய்தார்கள். யிமுஸாபனா’ என்பது பேரீச்ச மரங்களின் உச்சியிலுள்ள பேரீச்சம்பழங்களை (கொய்யப்பட்ட) உலர்ந்த பேரீச்சம்பழங் களுக்கு (பண்டமாற்று முறையில்) விற்பதாகும். அத்தியாயம் :
Sahih al-Bukhari · 2187 · Tamil
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் யிமுஹாகலா, முஸாபனா’ ஆகிய வியாபாரங்களைத் தடை செய்தார்கள். அத்தியாயம் :
Sahih al-Bukhari · 2188 · Tamil
ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரத்திலுள்ள கனிகளைக் குத்துமதிப்பாகக் கணக்கிட்டு விற்பதை, இரவல் மரத்தை (அரிய்யா) பெற்றவருக்கு மட்டும் அனுமதித்தார்கள். அத்தியாயம் :
Sahih al-Bukhari · 2189 · Tamil
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (மரத்திலுள்ள) உலராத கனிகள் நல்ல நிலையை அடையாத வரை அவற்றை விற்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். மேலும், ‘‘அவற்றில் எதையும் பொற்காசு, வெள்ளிக் காசு ஆகியவற்றுக்காகத் தவிர விற்கக் கூடாது; இரவல் மரங்களை (அராயா) தவிர” என்று கூறினார்கள்.…
Sahih al-Bukhari · 2190 · Tamil
அப்துல்லாஹ் பின் அப்தில் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களிடம், ‘‘(இப்னு அபீஅஹ்மத் அவர் களின் முன்னால் அடிமையான) அபூசுஃப்யான் (ரஹ்) அவர்களிடமிருந்து தாவூத் பின் அல்ஹுஸைன் (ரஹ்) அவர்கள், பின்வரும் நபிமொழியை அறிவித்தார்களா?” என்று உபைதுல்லாஹ் பின் அர்ரபீஉ (ரஹ்)…