Sahih al-Bukhari · 2011 · Tamil
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளானில் (இரவில்) தொழுதார்கள். அத்தியாயம் :
Read something that stays with you.
Tamil
Readings 2011–2040 of 14,990
Page 68
Sahih al-Bukhari · 2011 · Tamil
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளானில் (இரவில்) தொழுதார்கள். அத்தியாயம் :
Sahih al-Bukhari · 2012 · Tamil
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ரமளானில் ஒருநாள்) நள்ளிரவில் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுதார்கள்; அவர்களைப் பின்பற்றி மக்கள் சிலரும் தொழுதனர். விடிந்ததும் மக்கள் (இது பற்றிப்) பேசிக்கொண்டார்கள். (மறுநாள்) முதல் நாளைவிட அதிகமான மக்கள் திரண்டுவிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்…
Sahih al-Bukhari · 2013 · Tamil
அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை ரமளானில் எவ்வாறு இருந்தது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘‘ரமளானிலும் ரமளான் அல்லாத மாதங்களிலும் பதினொன்று ரக்அத்களைவிட அதிகமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்…
Sahih al-Bukhari · 2014 · Tamil
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர் (அதற்கு)முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும். யார் ‘லைலத்துல் கத்ர்' (கண்ணியமிக்க) இரவில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வழிபடுகிறாரோ அவர் (அதற்கு)முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும். இதை அபூஹுரைரா (ரலி)…
Sahih al-Bukhari · 2015 · Tamil
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபித்தோழர்களில் சிலர், கனவில் (ரமளானின்) இறுதி ஏழு (இரவு)களில் ஒன்றில் ‘லைலத்துல் கத்ர்' எனும் கண்ணிய மிக்க இரவு இருப்பதாகக் காட்டப்பெற்றனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இறுதி ஏழு(இரவு)களில் ஒன்று என்பதில் உங்கள் கனவுகள் ஒத்திருப்பதைக் காண்கிறேன்.…
Sahih al-Bukhari · 2016 · Tamil
அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ரமளானின் நடுப் பத்து நாட்களில் ‘இஃதிகாஃப்' இருந்தோம். அவர்கள் இருபதாம் நாள் காலையில் வெளியே வந்து எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) ‘‘எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது; பின்னர், அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது. எனவே,…
Sahih al-Bukhari · 2017 · Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரை தேடிக்கொள்ளுங்கள்! இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
Sahih al-Bukhari · 2018 · Tamil
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ரமளான் மாதத்தின் நடுப் பகுதியில் உள்ள பத்து நாட்களில் ‘இஃதிகாஃப்' இருப்பார்கள்; இருபதாம் இரவு கழிந்து மாலையாகி, இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் தமது இல்லம் திரும்புவார்கள்; அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தவர்களும் திரும்புவார்கள். இவ்வழக்கப்படி ஒரு…
Sahih al-Bukhari · 2019 · Tamil
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (லைலத்துல் கத்ரை) தேடிக்கொள் ளுங்கள்! இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
Sahih al-Bukhari · 2020 · Tamil
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்: ‘‘ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை தேடிக்கொள்ளுங்கள்!” என்று கூறுவார்கள். அத்தியாயம் :
Sahih al-Bukhari · 2021 · Tamil
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை தேடிக்கொள்ளுங்கள்! (அதாவது) ‘‘லைலத்துல் கத்ரை இருபத் தொன்றாவது இரவில், இருபத்து மூன்றாவது இரவில், இருபத்து ஐந்தாவது இரவில் தேடிக்கொள்ளுங்கள்!” இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.…
Sahih al-Bukhari · 2022 · Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: லைலத்துல் கத்ர் இரவு இறுதிப் பத்து நாட்களில் உள்ளது; அது இருபத்தொன்ப தாவது இரவிலோ இருபத்து மூன்றாவது இரவிலோ உள்ளது! இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் காலித் பின்…
Sahih al-Bukhari · 2023 · Tamil
உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘லைலத்துல் கத்ர்' பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டுவந்தார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சண்டையிட்டுக்கொண்டி ருந்தனர். (அவர்களைத் தடுக்கச் சென்ற) நபி (ஸல்) அவர்கள், ‘‘லைலத்துல் கத்ரை உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் புறப்பட்டுவந்தேன்; அப்போது இன்னாரும்…
Sahih al-Bukhari · 2024 · Tamil
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ரமளானின் இறுதிப்) பத்து நாட்கள் வந்துவிட்டால், நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்தி(வழிபாடுக்கு ஆயத்தமாகி)விடுவார்கள்; இரவில் (இறையை வழிபட்டு) விழித்திருப்பார்கள்; (இறை வழிபாட்டிற்காக) தம் குடும்பத் தாரை எழுப்பிவிடுவார்கள். அத்தியாயம் :
Sahih al-Bukhari · 2025 · Tamil
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்துவந்தார்கள். அத்தியாயம் :
Sahih al-Bukhari · 2026 · Tamil
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இறக்கும்வரை ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்துவந்தார்கள்; அவர்களுக்குப்பின் அவர்களின் துணைவியர் இஃதிகாஃப் இருந்தனர். அத்தியாயம் :
Sahih al-Bukhari · 2027 · Tamil
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளானில் நடுப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். அதன்படி ஓர் ஆண்டு அவர்கள் இஃதிகாஃப் இருந்து இருபத்தொன்றாவது இரவை அடைந்ததும் லிஅந்த இரவின் காலையில்தான் இஃதி காஃபிலிருந்து வெளியேறுவார்கள்லி ‘‘யார் என்னுடன் இஃதிகாஃப் இருந்தார்களோ…
Sahih al-Bukhari · 2028 · Tamil
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருந்தபோது தமது தலையை (வீட்டிலிருந்த) என் பக்கம் நீட்டுவார்கள்; மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அதை நான் வாரிவிடுவேன். அத்தியாயம் :
Sahih al-Bukhari · 2029 · Tamil
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்துகொண்டு தமது தலையை (வீட்டிலுள்ள) என்னிடம் நீட்டுவார்கள்; நான் அதை வாரிவிடுவேன். இஃதிகாஃப் இருக்கும்போது (அவசியத்) தேவைக்காகத் தவிர (வேறு காரணங் களுக்காக) வீட்டிற்குள் வரமாட்டார்கள்.2 அத்தியாயம் :
Sahih al-Bukhari · 2030 · Tamil
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னைக் கட்டி அணைப்பார்கள். அத்தியாயம் :
Sahih al-Bukhari · 2031 · Tamil
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னைக் கட்டி அணைப்பார்கள். அத்தியாயம் :
Sahih al-Bukhari · 2032 · Tamil
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘மஸ்ஜிதுல் ஹராம் புனிதப் பள்ளிவாசலில் ஓர் இரவு இஃதிகாஃப் இருப்பதாக அறியாமைக் காலத்தில் நான் நேர்ச்சை செய்திருந்தேன்” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘உமது நேர்ச்சையை…
Sahih al-Bukhari · 2033 · Tamil
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ரமளானில் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். அவர்களுக்காக நான் (பள்ளிவாசலில்) ஒரு கூடாரத்தை அமைப்பேன்; சுப்ஹு தொழுதுவிட்டு அதற்குள் அவர்கள் நுழைந்துவிடு வார்கள். ஹஃப்ஸா (ரலி) அவர்கள், என்னிடம் தமக்கொரு கூடாரம் அமைக்க அனுமதி கேட்டார்.…
Sahih al-Bukhari · 2034 · Tamil
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஒரு முறை) இஃதிகாஃப் இருக்க நாடினார்கள். அவர்கள் இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் சென்றபோது ஆயிஷாவின் கூடாரம், ஹஃப்ஸாவின் கூடாரம், ஸைனபின் கூடாரம் எனப் பல கூடாரங்களைக் கண்டார்கள். ‘‘இதன் மூலம் நீங்கள் நன்மையைத் தான் நாடுகிறீர்களா?” என்று…
Sahih al-Bukhari · 2035 · Tamil
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஸஃபிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளானில் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தபோது அவர்களைச் சந்திக்க நான் சென்றேன். சிறிது நேரம் அவர்களுடன் பேசிவிட்டு எழுந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களும் என்னுடன் எழுந்து வந்தார்கள்.…
Sahih al-Bukhari · 2036 · Tamil
அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ர் இரவு பற்றி ஏதேனும் கூறியதை நீங்கள் கேட்டீர்களா?” என்று அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: ஆம்! நாங்கள் ரமளானின் நடுப்…
Sahih al-Bukhari · 2037 · Tamil
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன், தொடர் உதிரப்போக்கு உடைய ஒருவர் இஃதிகாஃப் இருந்தார். (உதிரத்தின்) சிவப்பு நிறத்தையும் மஞ்சள் நிறத்தையும் அவர் காண்பார். சிலவேளை அவருக்கு அடியில் நாங்கள் ஒரு தட்டை வைப்போம். அவர் தொழுவார். அத்தியாயம் :
Sahih al-Bukhari · 2038 · Tamil
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஸஃபிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் (இஃதிகாஃப்) இருந்தார்கள். அவர்களிடம் அவர்களின் துணைவியர் (சிலர்) இருந்தார் கள். பிறகு (இல்லங்களுக்குத்) திரும்பி னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘அவசரப்படாதே! நானும் உன்னோடு வருகிறேன்” என்றார்கள்.…
Sahih al-Bukhari · 2039 · Tamil
அலீ பின் அல்ஹுசைன் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருந்தபோது ஸஃபிய்யா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். ஸஃபிய்யா (ரலி) அவர்கள் (பேசிவிட்டுத்) திரும்பிச் செல்லும்போது அவருடன் நபி (ஸல்) அவர்களும் நடந்தார்கள். அப்போது அவர்களை அன்சாரிகளில் ஒருவர் கூர்ந்து…
Sahih al-Bukhari · 2040 · Tamil
அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ரமளான் மாதத்தின்) நடுப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தோம். இருபதாம் நாள் காலையில் எங்கள் பொருட்களை நாங்கள் எடுத்துக்கொண்டி ருந்தோம். அப்போது எங்களிடம் வந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘யார் இஃதிகாஃப் இருந்தாரோ…