Sahih al-Bukhari · 1621 · Tamil
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் (கையில்) கயிரையோ வேறொரு பொருளையோ கட்டிக்கொண்டு ‘தவாஃப்’ செய்வதை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். உடனே அதைத் துண்டித் தார்கள். அத்தியாயம் :
Read something that stays with you.
Tamil
Readings 1621–1650 of 14,990
Page 55
Sahih al-Bukhari · 1621 · Tamil
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் (கையில்) கயிரையோ வேறொரு பொருளையோ கட்டிக்கொண்டு ‘தவாஃப்’ செய்வதை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். உடனே அதைத் துண்டித் தார்கள். அத்தியாயம் :
Sahih al-Bukhari · 1622 · Tamil
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: விடைபெறும் ஹஜ்ஜுக்கு முந்தைய ஹஜ்ஜில், அபூபக்ர் (ரலி) அவர்களை (ஹஜ் குழுவிற்குத்) தலைவராக நியமித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள். (அங்கு) துல்ஹஜ் பத்தாம் நாள் (மினாவில்), “எச்சரிக்கை! இந்த ஆண்டுக்குப் பின்னர் இணை வைப்பாளர்கள் யாரும் ஹஜ் செய்யக்…
Sahih al-Bukhari · 1623 · Tamil
அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “உம்ரா செய்யும் மனிதர் ஸஃபா, மர்வாவுக்கு மத்தியில் சுற்றுவதற்குமுன் தம் மனைவியோடு தாம்பத்திய உறவு கொள்ளலாமா?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்தபோது, கஅபாவை…
Sahih al-Bukhari · 1624 · Tamil
அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “உம்ரா செய்யும் மனிதர் ஸஃபா, மர்வாவுக்கு மத்தியில் சுற்றுவதற்குமுன் தம் மனைவியோடு தாம்பத்திய உறவு கொள்ளலாமா?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்தபோது, கஅபாவை…
Sahih al-Bukhari · 1625 · Tamil
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜுக்காக) மக்காவுக்கு வந்தபோது தவாஃப் (குதூம்) செய்தார்கள்; ஸஃபா- மர்வாவிற்கு இடையில் ஓடினார்கள். இந்த தவாஃபிற்குப் பின்னால் அரஃபாவிலிருந்து திரும்பும்வரை நபியவர்கள் கஅபாவிற்குச் செல்லவில்லை.36 அத்தியாயம் :
Sahih al-Bukhari · 1626 · Tamil
நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது ஹஜ்ஜை முடித்து) மக்காவிலிருந்து புறப்பட நாடினார்கள். (இறுதி) தவாஃப் செய்யாத நிலையில் நானும் புறப்பட ஆயத்தமானேன். அப்போது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “சுப்ஹு…
Sahih al-Bukhari · 1627 · Tamil
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்தபோது கஅபாவை ஏழு முறை (தவாஃப்) சுற்றினார்கள். பிறகு மகாமு இப்ராஹீமுக்குப் பின்னால் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு ஸஃபாவை நோக்கிப் புறப்பட்டார்கள். “நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரியுள்ளது” (33:21) என…
Sahih al-Bukhari · 1628 · Tamil
உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்கள், “சிலர் சுப்ஹு தொழுகைக்குப் பின்னால் தவாஃப் செய்துவிட்டு, மார்க்கச் சொற்பொழிவாள ரிடத்தில் போய் அமர்ந்துவிட்டார்கள். பிறகு சூரியன் உதயமானபோது எழுந்து (தவாஃபுடைய இரண்டு ரக்அத்கள்) தொழுதார்கள்” என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், (சொற்பொழி வில் அமர்ந்தவர்களைக்…
Sahih al-Bukhari · 1629 · Tamil
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: சூரியன் உதிக்கும்போதும் மறையும் போதும் தொழக் கூடாதென நபி (ஸல்) அவர்கள் தடை செய்ததை நான் செவியுற் றிருக்கிறேன். அத்தியாயம் :
Sahih al-Bukhari · 1630 · Tamil
Narrated Abida bin Humaid:`Abdul, `Aziz bin Rufa`i said, "I saw `Abdullah bin Az-Zubair performing Tawaf of the Ka`ba after the morning prayer then offering the two rak`at prayer." `Abdul `Aziz added, "I saw `Abdullah…
Not available in Tamil yet — showing English.
Sahih al-Bukhari · 1631 · Tamil
Narrated Abida bin Humaid:`Abdul, `Aziz bin Rufa`i said, "I saw `Abdullah bin Az-Zubair performing Tawaf of the Ka`ba after the morning prayer then offering the two rak`at prayer." `Abdul `Aziz added, "I saw `Abdullah…
Not available in Tamil yet — showing English.
Sahih al-Bukhari · 1632 · Tamil
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்துகொண்டு இறை யில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தார்கள். ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும்போதெல்லாம் தமது கையிலுள்ள ஒரு பொருளால் ஹஜருல் அஸ்வதை நோக்கிச் சைகை செய்துவிட்டு தக்பீர் சொன்னார்கள். அத்தியாயம் :
Sahih al-Bukhari · 1633 · Tamil
உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (ஹஜ்ஜின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “நான் நோய்வாய்பட்டுள்ளேன்” என முறையிட்டேன். அதற்கு அவர்கள், “நீ வாகனத்தில் அமர்ந்து மக்களுக்குப் பின்னால் (இறையில்லம் கஅபாவைச்) சுற்றி (தவாஃப்) வருவாயாக!” என்று சொன்னார்கள். அவ்வாறே நான் சுற்றி வந்தேன். அப்போது…
Sahih al-Bukhari · 1634 · Tamil
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள், (ஹாஜிகளுக்குத்) தண்ணீர் விநியோகிப்பதற்காக ‘மினா’வுடைய (துல்ஹஜ் 11,12,13 ஆகிய) இரவுகளில் மக்காவில் தங்கிக்கொள்ள அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதி…
Sahih al-Bukhari · 1635 · Tamil
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் வழங்கும் இடத்திற்கு வந்து தண்ணீர் கேட்டார்கள். அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள், (தம் புதல்வர்) ஃபள்ல் (ரலி) அவர்களிடம் “ஃபள்லே! நீ உன் தாயிடம் சென்று அவரிடமுள்ள குடிதண்ணீரை கொண்டுவந்து அல்லாஹ் வின்…
Sahih al-Bukhari · 1636 · Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் மக்காவில் இருந்தபோது எனது (வீட்டுக்) கூரை திறக்கப்பட்டது. (அதன் வழியாக வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி எனது நெஞ்சைப் பிளந்தார். பிறகு அதை ஸம்ஸம் நீரால் கழுவினார். பிறகு இறைநம்பிக்கையும் ஞானமும் நிரம்பிய தங்கத் தட்டு ஒன்றைக்…
Sahih al-Bukhari · 1637 · Tamil
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஸம்ஸம் தண்ணீர் அருந்தக் கொடுத்தேன். அதை அவர்கள் நின்று கொண்டு குடித்தார்கள். அன்றைய தினம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதுதான் இருந்தார்கள் என இக்ரிமா (ரஹ்) அவர்கள் சத்தியம் செய்து…
Sahih al-Bukhari · 1638 · Tamil
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டிப் புறப்பட்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யாரிடம் குர்பானிப் பிராணி உள்ளதோ அவர் ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் சேர்த்து இஹ்ராம் கட்டிக்கொள்ளட்டும்! பிறகு இரண்டும் நிறைவேற்றப்பட்ட பின்பே அவர்…
Sahih al-Bukhari · 1639 · Tamil
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்களிடம் அவர்களுடைய புதல்வர் அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) வந்தார். இப்னு உமர் (ரலி) அவர்கள் (ஹஜ்ஜுக்குச் செல்ல) வாகனம் வீட்டில் தயாராக இருந்தது. அப்போது அப்துல்லாஹ், “நிச்சயமாக, இவ்வாண்டு மக்களுக்கிடையே போர் ஏற்படும் என்று நான்…
Sahih al-Bukhari · 1640 · Tamil
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள்மீது போர் தொடுக்க ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் (மக்கா) வந்திருந்த ஆண்டில், இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹஜ் செய்ய விரும்பினார்கள்.40 அப்போது அவர்களிடம், “மக்களி டையே போர் மூண்டுள்ளது; எனவே, ஹஜ் செய்ய விடாமல்…
Sahih al-Bukhari · 1641 · Tamil
முஹம்மத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான், உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களிடம் (தவாஃபுல் குதூம் செய்தபின் இஹ்ராமிலிருந்து விடுபடுவது குறித்துக்) கேட்டேன். அதற்கு உர்வா (ரஹ்) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்துள்ளார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் அது பற்றி…
Sahih al-Bukhari · 1642 · Tamil
முஹம்மத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான், உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களிடம் (தவாஃபுல் குதூம் செய்தபின் இஹ்ராமிலிருந்து விடுபடுவது குறித்துக்) கேட்டேன். அதற்கு உர்வா (ரஹ்) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்துள்ளார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் அது பற்றி…
Sahih al-Bukhari · 1643 · Tamil
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், “நிச்சயமாக ‘ஸஃபா’வும் ‘மர்வா’வும் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவை ஆகும். எனவே, யார் அந்த (கஅபா) ஆலயத்தில் ஹஜ்ஜோ உம்ராவோ செய்கிறாரோ, அவர்மீது அவ்விரண்டையும் சுற்றிவருவது குற்ற மன்று”…
Sahih al-Bukhari · 1644 · Tamil
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், முதல் தவாஃப் செய்யும்போது (முதல்) மூன்று சுற்றுகளில் விரைந்து நடப்பார்கள்; (பிந்திய) நான்கு சுற்றுகளில் (சாதாரணமாக) நடப்பார்கள். மேலும் ஸஃபா-மர்வாவுக்கிடையே சுற்றிவரும்போது (பத்னுல் மசீல்) ஓடைப் பகுதியில் மட்டும் விரைந்து நடப்பார்கள்.43 உபைதில்லாஹ்…
Sahih al-Bukhari · 1645 · Tamil
அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் இப்னு உமர் (ரலி) அவர்களி டம், “ஒருவர் உம்ரா செய்வதற்காக இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்துவிட்டார்: ஸஃபா-மர்வாவுக்கிடையே ‘சயீ’ செய்யவில்லை. இந்நிலையில் அவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ளலாமா? (அதாவது இஹ்ராமிலி ருந்து விடுபடலாமா?)”…
Sahih al-Bukhari · 1646 · Tamil
அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் இப்னு உமர் (ரலி) அவர்களி டம், “ஒருவர் உம்ரா செய்வதற்காக இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்துவிட்டார்: ஸஃபா-மர்வாவுக்கிடையே ‘சயீ’ செய்யவில்லை. இந்நிலையில் அவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ளலாமா? (அதாவது இஹ்ராமிலி ருந்து விடுபடலாமா?)”…
Sahih al-Bukhari · 1647 · Tamil
அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜுக்காக) மக்காவுக்கு வந்தபோது, இறையில்லம் கஅபாவைச் சுற்றி வந்தபின் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்பு ஸஃபா-மர்வாவுக் கிடையே ஓடினார்கள்” என்று கூறி னார்கள். இதை அறிவித்த பிறகு, “நிச்சயமாக,…
Sahih al-Bukhari · 1648 · Tamil
ஆஸிம் பின் சுலைமான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், “ஸஃபா-மர்வாவுக்கிடையே ஓடுவதை (அன்சாரிகளான) நீங்கள் வெறுக்கக்கூடியவர்களாக இருந்தீர்களா?” எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்! ஏனெனில், ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங் களில் உள்ளவையாகும். எனவே, யார் அந்த…
Sahih al-Bukhari · 1649 · Tamil
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவையும் ஸஃபா மற்றும் மர்வாவையும் சுற்றி வரும்போது தொங்கோட்டம் ஓடியது, இணைவைப்பாளர் களுக்குத் தமது பலத்தைக் காட்டுவதற்காகத்தான். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Sahih al-Bukhari · 1650 · Tamil
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஹஜ்ஜின்போது) எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில் நான் மக்காவுக்கு வந்தேன். அப்போது நான் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்யவுமில்லை; ஸஃபா-மர்வாவுக்கிடையே ‘சயீ’ செய்யவு மில்லை. இது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் முறையிட்டேன். அப்போது அவர்கள், “ஹஜ்ஜு செய்பவர்…