Sahih al-Bukhari · 1591 · Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அபிசீனியாவைச் சேர்ந்த, சிறுத்த கால்களை உடைய ஒரு மனிதன் கஅபாவை (இடித்து)ப் பாழாக்குவான்.25 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
Read something that stays with you.
Tamil
Readings 1591–1620 of 14,990
Page 54
Sahih al-Bukhari · 1591 · Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அபிசீனியாவைச் சேர்ந்த, சிறுத்த கால்களை உடைய ஒரு மனிதன் கஅபாவை (இடித்து)ப் பாழாக்குவான்.25 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
Sahih al-Bukhari · 1592 · Tamil
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ரமளான் நோன்பு கடமையாக்கப்படு வதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்றுவந்தார்கள். அதுதான் கஅபாவுக் குப் புதிய திரைச்சீலை போர்த்தப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமளான் நோன்பைக் கடமையாக்கியபோது, “யார் ஆஷூரா நோன்பு நோற்க விரும்பு கிறாரோ…
Sahih al-Bukhari · 1593 · Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார் வந்த பிறகும் இந்த (கஅபா) ஆலயத்தில் நிச்சயமாக ஹஜ்ஜும் செய்யப்படும்; உம்ராவும் செய்யப்படும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஷுஅபா (ரஹ்) அவர்களது…
Sahih al-Bukhari · 1594 · Tamil
அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஷைபா பின் உஸ்மான் பின் அபீதல்ஹா (ரலி) அவர்களுடன் கஅபா வில் நாற்காலியில் அமர்ந்திருந்தேன். அப்போது ஷைபா (ரலி) அவர்கள், “இந்த இடத்தில் உமர் (ரலி) அவர்கள் அமர்ந் திருந்தார்கள். அப்போது ‘இந்த கஅபாவில் உள்ள…
Sahih al-Bukhari · 1595 · Tamil
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (வெளிப் பக்கமாக) வளைந்த கால் களை உடைய கறுப்பு நிறத்தவர் ஒவ்வொரு கல்லாகப் பெயர்த்து கஅபாவை உடைப்பதை நான் பார்ப்பதைப் போன்றிருக்கிறது. இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
Sahih al-Bukhari · 1596 · Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அபிசீனியாவைச் சேர்ந்த, மெலிந்த கால்களை உடைய மனிதன் கஅபாவை (இடித்து)ப் பாழாக்குவான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
Sahih al-Bukhari · 1597 · Tamil
ஆபிஸ் பின் ரபீஆ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள் ‘ஹஜருல் அஸ்வத்’ அருகில் வந்து அதை முத்த மிட்டுவிட்டு, “நீ தீங்கோ நன்மையோ அளிக்க முடியாத ஒரு கல்தான் என்பதை நான் நன்கறிவேன். நபி (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் கண்டிரா விட்டால்,…
Sahih al-Bukhari · 1598 · Tamil
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (மக்கா வெற்றியின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உசாமா பின் ஸைத் (ரலி), பிலால் (ரலி), உஸ்மான் பின் தல்ஹா (ரலி) ஆகியோரும் கஅபாவி னுள் சென்று கதவை மூடிக்கொண்டார்கள். அவர்கள் கதவைத் திறந்தபோது முதல் ஆளாக நானே…
Sahih al-Bukhari · 1599 · Tamil
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள் கஅபா வுக்குள் நுழையும்போது, நேராக நடந்து வாசலை முதுகுக்குப் பின்னாலாக்கி, எதிர் சுவருக்கும் தமக்கும் இடையே சுமார் மூன்று முழம் இருக்குமாறு நின்று தொழுதார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த இடத்தில் தொழுததாக பிலால்…
Sahih al-Bukhari · 1600 · Tamil
அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (‘களா’) உம்ரா செய்தபோது தவாஃப் செய்துவிட்டு மகாமு இப்ராஹீமுக்குப் பின்னால் நின்று இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவர்களை மக்களிட மிருந்து மறைத்தவாறு ஒருவர் நின்றி ருந்தார். அவரிடம் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்…
Sahih al-Bukhari · 1601 · Tamil
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றி ஆண்டில் மக்காவுக்கு) வந்தபோது, கஅபாவில் சிலைகள் இருந்ததால் உள்ளே நுழைய மறுத்துவிட்டார்கள்; பிறகு அவற்றை அப்புறப்படுத்துமாறு கட்டளையிட்டார்கள். உடனே அவை அப்புறப்படுத்தப்பட்டன. அச்சிலைகளில் (குறி பார்ப்பதற்குரிய) அம்புகளைக் கையில் தாங்கியவாறு இப்ராஹீம்…
Sahih al-Bukhari · 1602 · Tamil
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் (உம்ரத்துல் களாவிற்காக மக்கா) வந்தனர். அப்போது (குறைஷி) இணைவைப்பாளர் கள், “யஸ்ரிபின் (மதீனா) காய்ச்சலால் அவர்கள் நலிவடைந்த நிலையில் அவர் (முஹம்மத்) உங்களிடம் வந்திருக்கிறார்” என்று பேசிக்கொண்டனர். அப்போது (நலிவடையவில்லை எனக்…
Sahih al-Bukhari · 1603 · Tamil
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிற்கு வந்தபோது முதலாவது தவாஃபில் ஹஜருல் அஸ்வதை முத்த மிட்டதையும், ஏழு சுற்றுகளில் (முதல்) மூன்று சுற்றுகளில் (தோள்களைக் குலுக்கி) விரைவாக ஓடியதையும் நான் பார்த்தேன். அத்தியாயம் :
Sahih al-Bukhari · 1604 · Tamil
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஹஜ் மற்றும் உம்ராவின்போது (முதல்) மூன்று சுற்றுகளில் விரைவாக ஓடுவார்கள்; (மீதமுள்ள) நான்கு சுற்றுகளில் (சாதாரண மாக) நடந்து செல்வார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Sahih al-Bukhari · 1605 · Tamil
அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதவாது: உமர் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வதை நோக்கி, “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ கல்தான்; உன்னால் எந்த நன்மையோ தீமையோ செய்ய முடியாது என்பதை நிச்சயமாக நான் அறிவேன்; நபி (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் பார்த்திருக்காவிட்டால், நிச்சயமாக நான்…
Sahih al-Bukhari · 1606 · Tamil
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நெரிசலுள்ள நேரத்திலும் நெரிசலற்ற நேரத்திலும் நபி (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய இரண்டு மூலைகளையும் முத்தமிட்டதைப் பார்த்ததி லிருந்து நானும் இவ்விரண்டு மூலைகளையும் முத்தமிடுவதைக் கைவிட்டதில்லை. அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள்…
Sahih al-Bukhari · 1607 · Tamil
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜில் ஒட்டகத்தின் மீதமர்ந்து தவாஃப் செய்தார்கள். அப்போது முனை வளைந்த கைத்தடியால் ஹஜருல் அஸ்வதைத் தொட்(டு முத்தமி)ட்டார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Sahih al-Bukhari · 1608 · Tamil
அபுஷ்ஷஅஸா ஜாபிர் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: கஅபாவில் எந்தப் பகுதியையும் யார் தவிர்க்க முடியும்? முஆவியா (ரலி) அவர்கள் (கஅபாவின்) எல்லா மூலைகளையும் முத்தமிடுபவராக இருந்தார்கள். அப்போது முஆவியா (ரலி) அவர்களிடம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “(ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீயைத் தவிரவுள்ள)…
Sahih al-Bukhari · 1609 · Tamil
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய இரு மூலைகளைத் தவிர இந்த ஆலயத்தில் எந்த இடத்தையும் நபி (ஸல்) அவர்கள் முத்தமிட்டதை நான் பார்த்த தில்லை. அத்தியாயம் :
Sahih al-Bukhari · 1610 · Tamil
அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘ஹஜருல் அஸ்வத்’ (எனும் கறுப்பு நிறக்) கல்லை உமர் (ரலி) அவர்கள் முத்த மிடுவதை நான் பார்த்தேன். அப்போது அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் கண்டிராவிட்டால், உன்னை முத்தமிட்டிருக்கமாட்டேன்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
Sahih al-Bukhari · 1611 · Tamil
ஸுபைர் பின் அரபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ஹஜருல் அஸ்வத் (எனும் கறுப்பு நிறக்) கல்லை முத்தமிடுவதைப் பற்றிக் கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “நான், நபி (ஸல்) அவர்கள் அதைக் கையால் தொட்டு முத்தமிடுவதையும்…
Sahih al-Bukhari · 1612 · Tamil
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவை ‘தவாஃப்’ செய்தார் கள்; ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும் போதெல்லாம் அதை நோக்கிச் சைகை செய்தார்கள். அத்தியாயம் :
Sahih al-Bukhari · 1613 · Tamil
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவை ‘தவாஃப்’ செய்தார்கள். ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும்போதெல்லாம் தம்மிடம் இருந்த ஏதோ ஒரு பொருளால் (அதாவது கைத்தடியால்) ஹஜருல் அஸ்வதை நோக்கிச் சைகை செய்துவிட்டு, ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்)…
Sahih al-Bukhari · 1614 · Tamil
உர்வா பின் அஸ் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “நபி (ஸல்) அவர்கள் மக்கா வந்தவுடன் முதல் வேலையாக அங்கத் தூய்மை (உளூ) செய்து, கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தார்கள். அது (வெறும்) உம்ராவாக இருக்கவில்லை. பின்னர் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் இதைப் போன்றே…
Sahih al-Bukhari · 1615 · Tamil
உர்வா பின் அஸ் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “நபி (ஸல்) அவர்கள் மக்கா வந்தவுடன் முதல் வேலையாக அங்கத் தூய்மை (உளூ) செய்து, கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தார்கள். அது (வெறும்) உம்ராவாக இருக்கவில்லை. பின்னர் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் இதைப் போன்றே…
Sahih al-Bukhari · 1616 · Tamil
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காகவோ உம்ராவுக்காகவோ (மக்கா) வந்ததும் முதன் முதலாக தவாஃப் செய்வார்கள். அதில் (முதல்) மூன்று சுற்றுகளில் விரைந்து ஓடுவார்கள்; (பிந்திய) நான்கு சுற்றுகளில் (சாதாரணமாக) நடப்பார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு, ஸஃபா,…
Sahih al-Bukhari · 1617 · Tamil
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கஅபா ஆலயத் தில் முதல் தவாஃப் செய்யும்போது (முதல்) மூன்று சுற்றுகளில் விரைந்து நடப்பார்கள். (பிந்திய) நான்கு சுற்றுகளில் (சாதாரணமாக) நடப்பார்கள். மேலும் ஸஃபா, மர்வாவுக் கிடையே சுற்றும்போது, ‘பத்னுல் மசீல்’ எனும் (நீரோடை) பகுதியில்…
Sahih al-Bukhari · 1618 · Tamil
இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (மக்காவில் ஹஜ் அதிகாரியாக இருந்த) இப்னு ஹிஷாம், ஆண்களுடன் (சேர்ந்து) பெண்களும் தவாஃப் செய்வதைத் தடுத்தபோது, “நபி (ஸல்) அவர்களின் துணைவியர் ஆண்களுடன் (சேர்ந்து) தவாஃப் செய்திருக்க, அவர்களை அவர் எப்படித் தடுக்கலாம்?” என்று தாம் கேள்வி எழுப்பியதாக அதாஉ…
Sahih al-Bukhari · 1619 · Tamil
நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஹஜ்ஜின்போது) “நான் நோயுற்றுள் ளேன்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கு அவர்கள், “நீ மக்களுக்குப் பின்னால் வாகனத்தில் அமர்ந்து தவாஃப் செய்” என்றார்கள். நான் அவ்வாறே தவாஃப் செய்தேன்.…
Sahih al-Bukhari · 1620 · Tamil
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கஅபாவை தவாஃப் செய்துகொண்டிருந்தபோது, ஒரு மனிதருக்கு அருகே சென்றார்கள். அவர் தமது கையை வாரினாலோ அல்லது கயிற் றாலோ அல்லது வேறு ஒரு பொருளாலோ மற்றொருவரின் கையோடு இணைத்துக் கட்டி (தவாஃப் செய்து)கொண்டிருந்தார். உடனே நபி…