Sahih al-Bukhari · 6279 · Tamil
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (வெள்ளிக்கிழமை) ஜுமுஆ தொழுகைக்குப் பின்னால்தான் மதிய ஓய்வு எடுப்போம்; காலை உணவு உட்கொள்வோம்61 அத்தியாயம் :
Read something that stays with you.
Tamil
Readings 6271–6300 of 14,990
Page 210
Sahih al-Bukhari · 6279 · Tamil
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (வெள்ளிக்கிழமை) ஜுமுஆ தொழுகைக்குப் பின்னால்தான் மதிய ஓய்வு எடுப்போம்; காலை உணவு உட்கொள்வோம்61 அத்தியாயம் :
Sahih al-Bukhari · 6280 · Tamil
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (தம் பெயர்களில்) ‘அபூதுராப்’ (மண்ணின் தந்தை) எனும் பெயரைவிட வேறெந்தப் பெயரும் அலீ (ரலி) அவர்களுக்கு விருப்பமானதாக இருக்கவில்லை; அப்பெயர் கூறி அழைக்கப்படும்போது அவர்கள் (மிகவும்) மகிழ்வார்கள். (ஒருநாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் புதல்வி) ஃபாத்திமா…
Sahih al-Bukhari · 6281 · Tamil
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்காக (அவர்கள் மதிய ஓய்வெடுக்கும் பொருட்டு) தோல் விரிப்பு ஒன்றை விரிப்பார்கள். அந்த விரிப்பில் நபி (ஸல்) அவர்கள் மதிய ஓய்வெடுப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் உறங்கிவிட்டால் அவர்களின் (உடலிலிருந்து…
Sahih al-Bukhari · 6282 · Tamil
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவிற்கு அருகிலுள்ள) ‘குபா’ எனுமிடத்திற்குச் சென்றால் (தம் பால்குடி சிற்றன்னையான) உம்மு ஹராம் பின்த் மில்ஹான் (ரலி) அவர்களின் வீட்டுக்குச் செல்வது வழக்கம். (அவ்வாறு செல்லும் போது) உம்மு ஹராம் (ரலி) அவர்கள்…
Sahih al-Bukhari · 6283 · Tamil
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவிற்கு அருகிலுள்ள) ‘குபா’ எனுமிடத்திற்குச் சென்றால் (தம் பால்குடி சிற்றன்னையான) உம்மு ஹராம் பின்த் மில்ஹான் (ரலி) அவர்களின் வீட்டுக்குச் செல்வது வழக்கம். (அவ்வாறு செல்லும் போது) உம்மு ஹராம் (ரலி) அவர்கள்…
Sahih al-Bukhari · 6284 · Tamil
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஆடை அணியும் முறைகள் இரண்டையும் வணிக முறைகள் இரண்டையும் தடை செய்தார்கள். (முறையே) அந்த நான்குமாவன: 1. இஷ்திமாலுஸ் ஸம்மாஉ. (ஒருவர் ஒரே துணியைத் தம் தோள்களில் ஒன்றில் போட்டுக்கொள்ள, அவருடைய உடலின் இரு பக்கங்களில்…
Sahih al-Bukhari · 6285 · Tamil
இறைநம்பிக்கையாளர் களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் துணைவியர் களான எங்களில் ஒருவர்கூட விடுபடாமல் நாங்கள் அனைவரும் (நபி (ஸல்) அவர்களின் இறப்பு நெருங்கிக்கொண்டிருந்தபோது) அவர்கள் அருகில் இருந்துகொண்டிருந்தோம். அப்போது (நபியவர்களின் புதல்வியார்) ஃபாத்திமா (ரலி) நடந்துவந்தார். அல்லாஹ்வின் மீதாணையாக! அவரின்…
Sahih al-Bukhari · 6286 · Tamil
இறைநம்பிக்கையாளர் களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் துணைவியர் களான எங்களில் ஒருவர்கூட விடுபடாமல் நாங்கள் அனைவரும் (நபி (ஸல்) அவர்களின் இறப்பு நெருங்கிக்கொண்டிருந்தபோது) அவர்கள் அருகில் இருந்துகொண்டிருந்தோம். அப்போது (நபியவர்களின் புதல்வியார்) ஃபாத்திமா (ரலி) நடந்துவந்தார். அல்லாஹ்வின் மீதாணையாக! அவரின்…
Sahih al-Bukhari · 6287 · Tamil
அப்துல்லாஹ் பின் ஸைத் அல் அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் கால்மீது கால் வைத்து மல்லாந்து படுத்திருக்கக் கண்டேன்.67 அத்தியாயம் :
Sahih al-Bukhari · 6288 · Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் மூவர் இருக்கும்போது மூன்றாமவரை விட்டுவிட்டு இருவர் மட்டும் இரகசியம் பேச வேண்டாம். இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Sahih al-Bukhari · 6289 · Tamil
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் நபி (ஸல்) அவர்கள் ஓர் இரகசியம் சொன்னார்கள். அவர்களுடைய இறப்புக்குப் பிறகும்கூட ஒருவரிடமும் அதை நான் தெரிவிக்கவில்லை. என்னிடம் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் அது குறித்துக் கேட்டார்கள். அதை நான் அவருக்கும் தெரிவிக்கவில்லை.…
Sahih al-Bukhari · 6290 · Tamil
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் மூன்றுபேர் இருக்கும்போது மூன்றாமவரை விட்டுவிட்டு இரண்டுபேர் மட்டும் இரகசியம் பேச வேண்டாம்; நீங்கள் மூவரும் மக்களுடன் கலக்கும்வரை! ஏனெனில், (அவ்வாறு மூன்றுபேர் இருக்கும்போது இருவர் மட்டும் பேசுவது) மூன்றாமவரை வருத்தமடையச் செய்யும்.68 இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள்…
Sahih al-Bukhari · 6291 · Tamil
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒருநாள் (ஹுனைன் போரில் கிடைத்த செல்வங் களைப்) பங்கிட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், “இது அல்லாஹ்வின் திருப்தி நாடப்படாத பங்கீடாகும்” என்று (அதிருப்தியுடன்) கூறினார். நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம் (இது…
Sahih al-Bukhari · 6292 · Tamil
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (தொழுகைக்காக) இகாமத் சொல்லப்பட்டுவிட்டது. அப்போது ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஏதோ தனியாக உரையாடிக் கொண்டிருந்தார். அவர் உரையாடிக் கொண்டிருந்ததில் நபித்தோழர்கள் உறங்கிவிட்டனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் (பேசி முடித்து) எழுந்து வந்து தொழுவித்தார்கள்.70 அத்தியாயம் :
Sahih al-Bukhari · 6293 · Tamil
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் உறங்கச் செல்லும்போது உங்கள் வீட்டிலுள்ள நெருப்பை (அணைக்காமல்) விட்டுவிடாதீர்கள். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
Sahih al-Bukhari · 6294 · Tamil
அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: மதீனாவில் இரவு நேரத்தில் ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் வீட்டுக்காரர்களும் இருந்தனர். அவர்களின் நிலை குறித்து நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது “நிச்சயமாக இந்த நெருப்பு உங்களுக்கு ஆபத்தானது ஆகும். ஆகவே, நீங்கள் உறங்கச் செல்லும்போது நெருப்பை அணைத்துவிடுங்கள்”…
Sahih al-Bukhari · 6295 · Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இரவில் உறங்கச் செல்லும்போது) பாத்திரங்களை மூடிவையுங்கள். கதவு களைத் தாழிட்டுக்கொள்ளுங்கள். விளக்கு களை அணைத்துவிடுங்கள். ஏனெனில், தீங்கிழைக்கக்கூடிய (எலியான)து (விளக் கின்) திரியை (வாயால்) கவ்வி இழுத்துச் சென்று வீட்டிருப்பவர்களை எரித்து விடக்கூடும். இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)…
Sahih al-Bukhari · 6296 · Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரவில் நீங்கள் தூங்கும்போது விளக்குகளை அணைத்துவிடுங்கள். கதவுகளைத் தாழிட்டுக்கொள்ளுங்கள். தண்ணீர்ப் பைகளை சுருக்கிட்டு மூடிவிடுங்கள். உணவையும் பானத்தையும் மூடிவையுங்கள். இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹம்மாம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “குச்சியை (குறுக்காக) வைத்தேனும்…
Sahih al-Bukhari · 6297 · Tamil
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைத்தூதர்களின் வழிமுறையான) இயற்கை மரபுகள் ஐந்தாகும். 1. விருத்த சேதனம் செய்வது. 2. மர்ம உறுப்பின் முடிகளைக் களைய சவரக்கத்தியை உபயோகிப்பது. 3. அக்குள் முடிகளை அகற்றுவது. 4. மீசையைக் கத்தரிப்பது5. நகங்களை வெட்டுவது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.73…
Sahih al-Bukhari · 6298 · Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் எண்பது வயதிற்குப் பிறகு விருத்தசேதனம் செய்துகொண்டார்கள். அவர்கள் ‘கதூம்’ (எனும் வாய்ச்சியின்) மூலமாக விருத்தசேதனம் செய்துகொண் டார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில்…
Sahih al-Bukhari · 6299 · Tamil
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் (உயிர்) கைப்பற்றப் பட்டபோது தாங்கள் எவ்வாறிருந்தீர்கள்?” என்று வினவப்பட்டது. அதற்கு அவர்கள், “நான் அப்போது விருத்த சேதனம் செய்தவனாயிருந்தேன்” என்று பதிலளித்தார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்: பருவ…
Sahih al-Bukhari · 6300 · Tamil
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் விருத்தசேதனம் செய்தவனாக இருந்தபோது நபி (ஸல்) அவர்களின் உயிர் கைப்பற்றப்பட்டது. அத்தியாயம் :
Sahih al-Bukhari · 6301 · Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் யார் சத்தியம் செய்யும்போது (அறியாமைக்கால தெய்வச் சிலைகளான) ‘லாத்’தின் மீதும் ‘உஸ்ஸா’ வின் மீதும் சத்தியமாக என்று கூறிவிட் டாரோ அவர் (அதற்குப் பரிகாரமாக) ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று சொல்லட்டும். யார்…
Sahih al-Bukhari · 6302 · Tamil
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மழையிலிருந்து என்னைக் காக்கின்ற, வெயிலிருந்து எனக்கு நிழல் தருகின்ற ஒரு வீட்டை நானே என் கரத்தால் கட்டியதை (இப்போதும்) நினைத்துப்பார்க்கிறேன். அந்த வீட்டைக் கட்ட அல்லாஹ்வின் படைப்புகளில் யாரும் எனக்கு உதவவில்லை.77 அத்தியாயம்…
Sahih al-Bukhari · 6303 · Tamil
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் (உயிர்) கைப்பற்றப்பட் டது முதல் ஒரு செங்கல்லின் மீது இன்னொரு செங்கல்லை நான் வைத்தது மில்லை; எந்த பேரீச்சமரத்தையும் நான் நட்டதுமில்லை. (இதன் அறிவிப்பாளர்களில் ஒரு வரான) சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:…
Sahih al-Bukhari · 6304 · Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வோர் இறைத்தூதருக்கும் அவர் (தம் சமுதாயத்தாருக்காகப்) பிரார்த்தித்துக் கொள்ள அங்கீகரிக்கப்பட்ட பிரார்த்தனை ஒன்று (வழங்கப்பட்டு) உள்ளது. நான் எனது பிரார்த்தனையை, மறுமையில் என் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்வதற்காகப் பத்திரப்படுத்தவே விரும்புகிறேன்.2 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
Sahih al-Bukhari · 6305 · Tamil
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஒவ்வோர் இறைத்தூதரும் ஒரு (பிரத்யேக) வேண்டுதல் செய்துவிட்டனர்’. அல்லது ‘ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (தம் சமுதாயத்தார் தொடர்பாக) ஒரு (விசேஷப்) பிரார்த்தனை உண்டு; அதை அவர்கள் (இம்மையிலேயே) கேட்டுவிட்டனர்; அது ஏற்றுக்கொள்ளப்பட்டும்விட்டது. நான் எனது பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்காகப் பரிந்துரை…
Sahih al-Bukhari · 6306 · Tamil
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹும்ம! அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கலக்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க, வ வஅதிக்க மஸ்ததஅத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஅத்து. அபூஉ லக்க பி நிஅமத்திக்க அலய்ய, வ…
Sahih al-Bukhari · 6307 · Tamil
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒருநாளில் எழுபது தடவைக்குமேல் ‘அஸ்தஃக்ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி’ என்று கூறுகிறேன் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன். (பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கமே திரும்புகிறேன்.)3 அத்தியாயம் :
Sahih al-Bukhari · 6308 · Tamil
ஹாரிஸ் பின் சுவைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் எங்களுக்கு இரு ஹதீஸ்களை அறிவித்தார்கள். அவற்றில் ஒன்றை நபி (ஸல்) அவர்கள் கூறியதாகக் குறிப்பிட் டார்கள். மற்றொன்றைத் தாமாகக் கூறினார்கள். (அவையாவன:) 1. இறைநம்பிக்கையாளர் தம் பாவங்களை மலைகளைப் போன்று (பாரமாகக்)…