நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வைவிட அதிக ரோஷ முள்ளவர் யாருமில்லை. அதனால்தான் மானக்கேடான செயல்கள் அனைத்திற்கும் அவன் தடை விதித்துள்ளான். அல்லாஹ்வைவிட மிகவும் புகழை விரும்புகின்றவர் வேறெவருமிலர். இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.150 அத்தியாயம் :
Read full narration →
Sahih al-Bukhari · 5221 · Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹம்மதின் சமுதாயமே! தன் அடியார்களில் ஆணோ பெண்ணோ யார் விபசாரத்தில் ஈடுபடுவதைக் கண்டாலும் அல்லாஹ்வைவிடக் கடுமையாக ரோஷம் கொள்பவர் வேறெவருமிலர். முஹம்மதின் சமுதாயமே! நான் அறிவதையெல்லாம் நீங்களும் அறிந்தால் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள். இதை ஆயிஷா (ரலி) அவர்கள்…
Read full narration →
Sahih al-Bukhari · 5222 · Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வைவிட அதிக ரோஷமுடையவர் யாருமில்லை. இதை அஸ்மா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
Sahih al-Bukhari · 5222
Sahih al-Bukhari · 5223 · Tamil
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயம் அல்லாஹ் ரோஷம்கொள் கிறான். அல்லாஹ்வின் ரோஷம் என்பது, அவன் தடை விதித்துள்ள ஒன்றை (தடையை மீறி) இறைநம்பிக்கையாளர் செய்வதுதான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Read full narration →
Sahih al-Bukhari · 5224 · Tamil
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னை ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் (மக்காவிலிருக்கும்போதே) மணந்துகொண்டார்கள். இந்தப் பூமியில் அவருக்குத் தண்ணீர் இறைக்கும் ஓர் ஒட்டகத்தையும் அவரது குதிரையையும் தவிர வேறு எந்தச் சொத்துபத்துகளும் அடிமைகளும் உடைமைகளும் இருக்க வில்லை. அந்தக் குதிரைக்கு நான்…
Read full narration →
Sahih al-Bukhari · 5225 · Tamil
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரில் ஒருவரிடம் இருந்(து கொண்டிருந்)தார்கள். இறைநம்பிக்கை யாளர்களின் அன்னையரில் ஒருவ(ரான நபியவர்களுடைய மற்றொரு துணைவி யா)ர் உணவுப் பண்டமுள்ள தட்டு ஒன்றை (நபியவர்களுக்காகப் பணியாள் ஒருவரிடம்) கொடுத்தனுப்பினார்கள்.153 (அப்போது) நபி (ஸல்)…
Read full narration →
Sahih al-Bukhari · 5226 · Tamil
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள், ‘‘(கனவில்) ‘நான் சொர்க்கத்தினுள் நுழைந்தேன்’ அல்லது ‘சொர்க்கத்திற்குச் சென்றேன்’. அங்கு ஒரு மாளிகையைக் கண்டேன். நான், ‘‘இது யாருடையது?” என்று கேட்டேன். அவர்கள் (வானவர்கள்), ‘‘இது உமர் பின் அல்கத்தாப் அவர் களுடையது”…
Read full narration →
Sahih al-Bukhari · 5227 · Tamil
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (ஒருநாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள், ‘‘நான் தூங்கிக்கொண்டிருந்தபோது (கனவில்) என்னைச் சொர்க்கத்தில் கண்டேன். அப்போது (அங்கிருந்த) மாளிகை ஒன்றின் அருகில் ஒரு பெண் (உலகில் தான் இறைவணக்கம் புரிபவளாய் இருந்துவந்ததைக் குறிக்கும்…
Read full narration →
Sahih al-Bukhari · 5228 · Tamil
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘எப்போது நீ என்னைக் குறித்து திருப்தியுடன் இருக்கிறாய்; எப்போது நீ என்மீது கோபத்துடன் இருக்கிறாய் என்று (உன்னைப் பற்றி) நான் நன்றாக அறிந்து வைத்துள்ளேன்” என்று கூறினார்கள். அதற்கு நான், ‘‘எப்படி நீங்கள் அறிந்துகொள்வீர்கள்?”…
Read full narration →
Sahih al-Bukhari · 5229 · Tamil
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: கதீஜா (ரலி) அவர்களின் மீது நான் ரோஷம் கொண்டதைப் போன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய (இதர) துணைவியர் எவர்மீதும் நான் ரோஷப்பட்டதில்லை. ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கதீஜாவை அதிகமாக நினைவுகூர்ந்து, அவரை (அடிக்கடி) புகழ்ந்து பேசி வந்தார்கள்.…
Read full narration →
Sahih al-Bukhari · 5230 · Tamil
மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்த படி, ‘‘ஹிஷாம் பின் முஃகீரா கோத்திரத்தார் தங்கள் (உறவினரான அபூஜஹ்லுடைய) மகளை அலீ பின் அபீதாலிப் அவர்களுக்கு மணமுடித்து வைக்க (என்னிடம்) அனுமதி கோரினர். அதற்கு நான்…
Read full narration →
Sahih al-Bukhari · 5231 · Tamil
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் அல்லாத வேறு எவரும் உங்களுக்கு அறிவிக்க முடியாத, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற செய்தி ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கப்போகிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கல்வி அகற்றப்பட்டுவிடுவதும், அறியாமை மலிந்துவிடுவதும், விபசாரம்…
Read full narration →
Sahih al-Bukhari · 5232 · Tamil
உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன்” என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது)…
Read full narration →
Sahih al-Bukhari · 5233 · Tamil
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்கலாகாது; (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவினருடன் (அவள்) இருக்கும்போது தவிர!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே ஒருவர் எழுந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் மனைவி ஹஜ் செய்யப் புறப்பட்டுவிட்டாள்.…
Read full narration →
Sahih al-Bukhari · 5234 · Tamil
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்சாரிகளில் ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது அவருடன் தனியாக (எங்கள் காதில் விழாத விதத்தில்) நபியவர்கள் பேசிக்கொண்டி ருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், அந்தப் பெண்மணியிடம், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! (அன்சாரிகளாகிய) நீங்கள் மக்களிலேயே…
Read full narration →
Sahih al-Bukhari · 5235 · Tamil
உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருநாள் என் கணவர்) நபி (ஸல்) அவர்கள் என் அருகில் இருந்துகொண்டி ருந்தார்கள். அங்கு எங்கள் வீட்டில் (பெண்களைப்போல் நடந்துகொள்ளும்) ‘அரவானி’ ஒருவனும் இருந்துகொண்டி ருந்தான். அந்த ‘அரவானி’ என் சகோதரர் அப்துல்லாஹ் பின் அபீஉமய்யாவிடம், ‘‘நாளை தாயிஃப் நகர்மீது…
Read full narration →
Sahih al-Bukhari · 5236 · Tamil
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னைத் தமது மேல்துண்டால் மறைத்துக்கொண்டிருக்க பள்ளிவாசல் வளாகத்தில் (ஈட்டியெறிந்து) விளையாடிக்கொண்டிருந்த அபிசீனியர் களை நான் (என் வீட்டிலிருந்தபடி) பார்த்துக்கொண்டிருந்தேன். நானாகச் சடைந்துவிடும்வரை பார்த்துக்கொண்டி ருந்தேன். விளையாட்டுகள்மீது பேராவல் கொண்ட இளம் வயதுப் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை…
Read full narration →
Sahih al-Bukhari · 5237 · Tamil
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்களுடைய துணைவி யாரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) அவர்கள் (பர்தா அணிவது சட்டமாக்கப் பட்டபின் ஒருநாள்) இரவு நேரத்தில் வெளியே சென்றார்கள். அவர்களைப் பார்த்து உமர் (ரலி) அவர்கள் அடையாளம் புரிந்துகொண்டு, ‘‘சவ்தாவே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள்…
Read full narration →
Sahih al-Bukhari · 5238 · Tamil
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் மனைவியர் பள்ளிவாசலுக்குச் செல்ல உங்களிடம் அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.168 அத்தியாயம் :
Read full narration →
Sahih al-Bukhari · 5239 · Tamil
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருநாள்) என் பால்குடித் தந்தை (அபுல் குஐஸ்) அவர்களுடைய சகோதரர் (அஃப்லஹ் என்பார்) வந்து என் வீட்டுக்குள்ளே வர அனுமதி கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்காமல் அவருக்கு அனுமதியளிப்ப தில்லை என்று நான் இருந்துவிட்டேன். பிறகு அல்லாஹ்வின் தூதர்…
Read full narration →
Sahih al-Bukhari · 5240 · Tamil
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண் இன்னொரு பெண்ணை (வெற்று மேனியோடு) கட்டித் தழுவிட வேண்டாம். பின்னர் அவளைப் பற்றி இவள் தன் கணவனிடம், அவளை அவன் நேரில் பார்ப்பதைப் போன்று வர்ணனை செய்ய வேண்டாம். இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.…
Read full narration →
Sahih al-Bukhari · 5241 · Tamil
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண் இன்னொரு பெண்ணை (வெற்றுமேனியோடு) கட்டித் தழுவிட வேண்டாம். பின்னர் அவளைப் பற்றி இவள் தன் கணவனிடம், அவளை அவன் நேரில் பார்ப்பதைப் போன்று வர்ணனை செய்ய வேண்டாம். இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.170 அத்தியாயம்…
Read full narration →
Sahih al-Bukhari · 5242 · Tamil
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களுடைய புதல்வர் சுலைமான் (அலை) அவர்கள், ‘‘நான் இன்றிரவு (என்னுடைய) நூறு துணைவி யரிடமும் சென்று வருவேன். அப்பெண் களில் ஒவ்வொருவரும் இறைவழியில் அறப்போர் புரியும் (வீரக்) குழந்தை ஒன்றைப் பெற்றெடுப்பார்கள்” என்று கூறினார்கள். அப்போது…
Read full narration →
Sahih al-Bukhari · 5243 · Tamil
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருவர் (வெளியிலிருந்து) இரவு நேரத்தில் திடீரெனத் தம் வீட்டாரிடம் வருவதை நபி (ஸல்) அவர்கள் வெறுக்கக்கூடியவர்களாயிருந்தார்கள். அத்தியாயம் :
Read full narration →
Sahih al-Bukhari · 5244 · Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் நீண்ட நாட்கள் கழித்து ஊர் திரும்பினால் இரவு நேரத்தில் திடீரெனத் தம் வீட்டாரிடம் செல்ல வேண்டாம்.172 இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
Read full narration →
Sahih al-Bukhari · 5245 · Tamil
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஒரு போரில் (தபூக்கில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். நாங்கள் (போரை முடித்து) திரும்பிக் கொண்டிருந்தபோது, மெதுவாகச் செல்லக்கூடிய ஒட்டகத்தின்மீது இருந்த வாறு நான் அவசரப்பட்டுக்கொண்டிருந் தேன். அப்போது ஒருவர் எனக்குப் பின்னாலிருந்து வாகனமொன்றில் வந்து…
Read full narration →
Sahih al-Bukhari · 5246 · Tamil
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (தபூக் போரிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த என்னிடம்) நபி (ஸல்) அவர்கள், ‘‘நீ இரவில் (மதீனாவுக்குள்) நுழைந்த கையோடு உன் வீட்டாரிடம் சென்றுவிடாதே! (வெளியூர் சென்ற கணவரைப்) பிரிந்திருக்கும் பெண் சவரக்கத்தியைப் பயன்படுத்தி(த் தன்னை ஆயத்தப்படுத்தி)க்கொள்ளும்வரை, தலைவிரி கோலமாயிருக்கும் பெண்…
Read full narration →
Sahih al-Bukhari · 5247 · Tamil
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (தபூக் எனும்) ஒரு போரில் இருந்தோம். (போர் முடிந்து) திரும்பிவந்த நாங்கள் மதீனாவை நெருங்கிக்கொண்டிருந்தோம். அப்போது நான் மெதுவாகச் செல்லும் என் ஒட்டகத்தில் இருந்தவாறு அவசரப்பட்டுக்கொண்டிருந்தேன். அந்த நேரம் எனக்குப் பின்னால் இருந்து…
Read full narration →
Sahih al-Bukhari · 5248 · Tamil
அபூஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உஹுத் போர் நாளில் (காயமுற்ற) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காயத்திற்கு என்ன மருந்திடப்பட்டது என்பது தொடர்பாக மக்கள் கருத்து வேறுபாடு கொண்டனர். ஆகவே, சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதி (ரலி) அவர்களிடம் (சென்று அது பற்றிக்)…
Read full narration →
Sahih al-Bukhari · 5249 · Tamil
அப்துர் ரஹ்மான் பின் ஆபிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ‘‘தாங்கள் (பெருநாட்களான) ஈதுல் அள்ஹாவிலோ ஈதுல் ஃபித்ரிலோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்திருக்கின்றீர்களா?” என்று கேட்டார். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘ஆம் (இருந்திருக்கிறேன்). (உறவின் காரணத்தால்)…