Sahih al-Bukhari · 2851 · Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைவழியில் செலுத்தப்படும்) குதிரை களின் நெற்றிகளில் வளம் (பரக்கத்) உள்ளது. இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
Read something that stays with you.
The first of the two Sahihs — revelation, belief, prayer, knowledge and manners.
Readings 2851–2880 of 7,580
Page 96
Sahih al-Bukhari · 2851 · Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைவழியில் செலுத்தப்படும்) குதிரை களின் நெற்றிகளில் வளம் (பரக்கத்) உள்ளது. இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
Sahih al-Bukhari · 2852 · Tamil
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: (இறைவழியில் செலுத்தப்படும்) குதிரைகளின் நெற்றிகளில் மறுமை நாள்வரை நன்மை பிணைக்கப்பட்டி ருக்கிறது. அந்த நன்மை யாதெனில், (அந்தக் குதிரையில் ஏறி அறப்போர் புரிவதால் மறுமையில் கிடைக்கும்) பிரதிபலனும், போரில் கிடைக்கும் செல்வமும் ஆகும். இதை உர்வா பின் அல்ஜஅத் அல் பாரிகீ (ரலி)…
Sahih al-Bukhari · 2853 · Tamil
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டும் அவனது வாக்குறுதியை நம்பியும் யார் இறைவழியில் (போர் புரிவதற்காக) ஒரு குதிரையைக் கட்டிவைக்கிறாரோ அவர் அதற்குப் போடுகின்ற தீனியும், அதற்குப் புகட்டுகின்ற தண்ணீரும், அதன் சாணமும், அதன் சிறுநீரும் மறுமை நாளில் அவரது (செயல்கள் நிறுக்கப்படும்…
Sahih al-Bukhari · 2854 · Tamil
அபூக(த்)தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் (ஹுதைபியா ஆண்டில் மக்காவுக்குப்) புறப்பட்டேன். (வழியில்) என் தோழர்கள் சிலருடன் நான் பின்தங்கிவிட்டேன். அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்தார்கள்; நான் இஹ்ராம் கட்டியிருக்கவில்லை. என் தோழர்கள் நான் பார்ப்பதற்கு முன்னால் ஒரு காட்டுக் கழுதையைப் பார்த்தார்கள். அதைப்…
Sahih al-Bukhari · 2855 · Tamil
சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது: எங்கள் தோட்டத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு (சொந்தமான) யிலுஹைஃப்’ எனப்படும் குதிரையொன்று இருந்தது. அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன்: அவர்களில் சிலர் அதன் பெயர் யிலுஃகைஃப்’ என்று கூறுகிறார்கள். அத்தியாயம் :
Sahih al-Bukhari · 2856 · Tamil
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் யிஉஃபைர்’ எனப்படும் கழுதை யின் மீது அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், ‘‘முஆதே! அல்லாஹ்வுக்கு மக்கள்மீதுள்ள உரிமை என்ன; மக்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?” என்று (என்னி…
Sahih al-Bukhari · 2857 · Tamil
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: மதீனாவில் (போர் பற்றி) பீதி ஏற் பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள் யிமன்தூப்’ எனப்படும் எங்கள் குதிரை ஒன்றை இரவல் வாங்கினார்கள். (அதில் ஏறிச் சென்று திரும்பிவந்து) ‘‘பீதி(க்கான காரணம்) எதையும் நாம் பார்க்கவில்லை. இந்த குதிரையைத்…
Sahih al-Bukhari · 2858 · Tamil
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘அபசகுனம் என்பது (எதிலாவது இருக்க முடியும் என்றால்) குதிரை, பெண், வீடு ஆகிய மூன்றில் மட்டுமே (இருக்க முடியும்)” என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன். அத்தியாயம் :
Sahih al-Bukhari · 2859 · Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அபசகுனம் எதிலாவது இருக்குமானால் பெண்ணிலும் குதிரையிலும் வீட்டிலும் தான் இருக்கும். இதை சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.33 அத்தியாயம் :
Sahih al-Bukhari · 2860 · Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குதிரை மூவருக்கு (மூன்று வகை விளைவுகளைத் தரும்). ஒருவருக்கு நற்கூலி ஆகும். மற்றொரு மனிதருக்குப் (பொருளா தாரப்) பாதுகாப்பளிக்கக்கூடியதாகும். இன்னொரு மனிதருக்குப் பாவச் சுமையாகும். அதை இறைவழியில் பயன்படுத்து வதற்காகப் பசுமையான புல்வெளியில், அல்லது ஒரு தோட்டத்தில் ஒரு நீண்ட…
Sahih al-Bukhari · 2861 · Tamil
அபுல்முத்தவக்கில் அலீ பின் தாவூத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் சென்றேன். ‘‘நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்ட ஹதீஸ் ஒன்றை எனக்கு அறி வியுங்கள்” என அவர்களிடம் சொன் னேன். அப்போது அவர்கள் பின்வருமாறு தெரிவித்தார்கள்: நான்…
Sahih al-Bukhari · 2862 · Tamil
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: மதீனாவில் (பகைவர்கள் படை யெடுத்து வருவதாகப்) பீதி ஏற்பட்டிருந்தது. ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குச் சொந்தமான யிமன்தூப்’ எனப்படும் குதிரை ஒன்றை இரவல் வாங்கி அதில் ஏறிச் சென்றார்கள். பிறகு (எல்லைகளைப் பார்த்துவிட்டு வந்து),…
Sahih al-Bukhari · 2863 · Tamil
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (போரில் கிடைத்த செல்வத்திலிருந்து) குதிரைக்கு இரு பங்குகளையும் (அதல்லாமல்) அதன் உரிமையாளருக்கு ஒரு பங்கையும் கொடுத்தார்கள். மாலிக் (ரஹ்) அவர்கள், ‘‘அரபுக் குதிரைகளுக்கும் மற்றக் குதிரைகளுக்கும் போரில் கிடைக்கும் செல்வங்களிலிருந்து பங்கு கொடுக்கப்பட வேண்டும்.…
Sahih al-Bukhari · 2864 · Tamil
அபூஇஸ்ஹாக் அம்ர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடம், ‘‘நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட்டுவிட்டு ஹுனைன் (போர்) அன்று வெருண்டு ஓடிவிட்டீர்களா(மே, உண்மைதானா)?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், ‘‘(ஆம், உண்மை தான்.) ஆனால்,…
Sahih al-Bukhari · 2865 · Tamil
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தமது காலை, ஏறும் வளையத்தில் நுழைத்து, தமது ஒட்டகம் நிலைக்கு வந்துவிடும்போது துல் ஹுலைஃபா பள்ளிவாசலிலிருந்து (ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி) யிதல்பியா’ கூறுவார்கள். அத்தியாயம் :
Sahih al-Bukhari · 2866 · Tamil
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சேணம் பூட்டப் படாத, திறந்தமேனி கொண்ட ஒரு குதிரையின் மீது அமர்ந்து, கழுத்தில் வாளொன்று தொங்கிக்கொண்டிருக்க, மதீனாவாசிகளை நோக்கி வந்தார்கள்.38 அத்தியாயம் :
Sahih al-Bukhari · 2867 · Tamil
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: மதீனாவாசிகள் ஒருமுறை (எதிரிகள் படையெடுத்து வருவதாகக் கேள்விப் பட்டு) பீதிக்குள்ளானார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குச் சொந்தமான, மந்தமாக நடக்கும் தன்மையுடைய ஒரு குதிரையின் மீது ஏறிச் சென்றார்கள். திரும்பி வந்தபோது, ‘‘உங்களின் இந்தக்…
Sahih al-Bukhari · 2868 · Tamil
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மெலியவைக்கப் பட்ட (பயிற்சியளிக்கப்பட்ட) குதிரைகளை யிஹஃப்யா’ எனுமிடத்திலிருந்து ‘ஸனிய்யத் துல் வதா’ எனும் மலைக் குன்றுவரை (ஓட்டப் பந்தயத்தில்) ஓடச்செய்தார்கள். மெலியவைக்கப்படாத (பயிற்சியளிக் கப்படாத) குதிரைகளை ‘ஸனிய்யத்துல் வதா’விலிருந்து யிபனூ ஸுரைக்’ பள்ளிவாசல்வரை (பந்தயத்தில்) ஓடச்செய்தார்கள்.…
Sahih al-Bukhari · 2869 · Tamil
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மெலியவைக்கப்படாத (பயிற்சி பெறாத) குதிரைகளுக்கிடையே பந்தயம் வைத்தார் கள். அவற்றின் பந்தய எல்லை, ‘ஸனிய்யத் துல் வதா’விலிருந்து பனூ ஸுரைக் குலத்தாரின் பள்ளிவாசல்வரை இருந்தது. நானும் இத்தகைய குதிரைகளுக் கிடையேயான பந்தயங்களில் கலந்து…
Sahih al-Bukhari · 2870 · Tamil
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மெலியவைக்கப்பட்ட (பயிற்சி அளிக்கப் பட்ட) குதிரைகளுக்கிடையே பந்தயம் வைத்தார்கள். அவற்றை யிஹஃப்யா’ விலிருந்து அனுப்பினார்கள். அவற்றின் (பந்தய) எல்லை ‘ஸனிய்யத்துல் வதா’வாக இருந்தது” என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூ…
Sahih al-Bukhari · 2871 · Tamil
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் ஒட்டகம் ‘அள்பா’ என்று அழைக்கப்பட்டு வந்தது.41 அத்தியாயம் :
Sahih al-Bukhari · 2872 · Tamil
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ‘அள்பா’ என்று அழைக்கப்பட்ட ஒட்டகம் ஒன்று இருந்தது. அது பந்தயத்தில் எவரும் அதை முந்த முடியாத (அளவுக்கு விரைவாக ஓடக்கூடிய)தாக இருந்தது. இந்நிலையில், கிராமவாசி ஒருவர் பயணத்திற்கும் சுமை ஏற்றுவதற்கும் ஏற்ற ஒட்டகம் ஒன்றின்மீது வந்தார். அது…
Sahih al-Bukhari · 2873 · Tamil
அம்ர் பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (இறந்தபோது) தமது வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையையும், தமது ஆயுதத்தையும், தர்மமாக விட்டுச்சென்ற ஒரு நிலத்தையும் தவிர வேறெதையும் விட்டுச்செல்ல வில்லை.45 அத்தியாயம் :
Sahih al-Bukhari · 2874 · Tamil
பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் ஒரு மனிதர், ‘‘அபூஉமாராவே! ஹுனைன் போரின்போது நீங்கள் புறமுதுகிட்டு ஓடினீர்களே!” என்று கேட்டார். நான், ‘‘இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் புறமுதுகிட்டு ஓடவில்லை. ஆனால், மக்களில் அவசரக்காரர்கள்தான் புறமுது கிட்டுச் சென்றார்கள். ஆகவே, ஹவாஸின் குலத்தார் அவர்களை…
Sahih al-Bukhari · 2875 · Tamil
இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் அறப் போரில் ஈடுபட அனுமதி கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘(பெண்களாகிய) உங்கள் அறப்போர் ஹஜ் செய்வதுதான்” என்று கூறினார்கள்.46 அத்தியாயம் :
Sahih al-Bukhari · 2876 · Tamil
இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் அவர்களுடைய துணைவியர் அறப்போர் குறித்து (அதில் ஈடுபட அனுமதியளிக்கும்படி) கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘ஹஜ் செய்வது (உங்களுக்கு) சிறந்த அறப்போர் ஆகும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
Sahih al-Bukhari · 2877 · Tamil
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மில்ஹானின் மகளான உம்மு ஹராம் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கு சாய்ந்து அமர்ந்து (உறங்கிக்) கொண்டிருந்துவிட்டு, பிறகு (விழித் தெழுந்து) சிரித்தார்கள். உம்மு ஹராம் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று…
Sahih al-Bukhari · 2878 · Tamil
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மில்ஹானின் மகளான உம்மு ஹராம் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கு சாய்ந்து அமர்ந்து (உறங்கிக்) கொண்டிருந்துவிட்டு, பிறகு (விழித் தெழுந்து) சிரித்தார்கள். உம்மு ஹராம் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று…
Sahih al-Bukhari · 2879 · Tamil
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் வெளியே (பயணம்) செல்ல நாடினால் தம் துணைவிய ரிடையே சீட்டுக் குலுக்கிப்போட்டு, எவரது பெயர் வருகிறதோ அவரை (மட்டும்) அழைத்துக்கொண்டு செல்வார்கள். இவ்வாறே, அவர்கள் (புரிந்த) ஓர் அறப் போருக்குச் சென்றபோது (அவர்களின் துணைவியராகிய) எங்களிடையே சீட்டுக்…
Sahih al-Bukhari · 2880 · Tamil
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுத் போரின்போது மக்கள் நபி (ஸல்) அவர்களை விட்டுவிட்டுத் தோல்வி யுற்று (பின்வாங்கிச்) சென்றார்கள். அப்போது நான் ஆயிஷா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களையும் உம்மு சுலைம் (ரலி) அவர்களையும் கண்டேன். அவர்கள் இருவரும் (தண்ணீர் நிரம்பிய) தோல் பைகளைத் தம்…