Sahih al-Bukhari · 1801 · Tamil
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (பயணத்திலிருந்து திரும்பும்போது) இரவு நேரத்தில் திடீரென வீட்டாரிடம் செல்வதை நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். அத்தியாயம் :
Read something that stays with you.
The first of the two Sahihs — revelation, belief, prayer, knowledge and manners.
Readings 1801–1830 of 7,580
Page 61
Sahih al-Bukhari · 1801 · Tamil
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (பயணத்திலிருந்து திரும்பும்போது) இரவு நேரத்தில் திடீரென வீட்டாரிடம் செல்வதை நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். அத்தியாயம் :
Sahih al-Bukhari · 1802 · Tamil
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணத்திலிருந்து திரும்பி மதீனாவின் உயரமான பாதைகளைப் பார்க்கும்போது தமது ஒட்டகத்தை விரைவாகச் செலுத்து வார்கள்; வாகனம் கால்நடையாக இருப் பின் அதைத் தட்டிவிடுவார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஹாரிஸ் பின்…
Sahih al-Bukhari · 1803 · Tamil
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: இந்த வசனம் (அன்சாரிகளான) எங்கள் விஷயத்தில்தான் அருளப் பெற்றது. (அறியாமைக் காலத்தில்) அன்சாரிகள் ஹஜ் செய்(ய இஹ்ராம் கட்டி முடித்)துவிட்டு, மீண்டும் (வீட்டுக்கு) வருவதானால், வீடுகளில் (முன்பக்க) வாசல் வழியாக நுழையமாட்டார்கள். மாறாக, பின்பக்க வாசல் வழியேதான் நுழைவார்கள்.…
Sahih al-Bukhari · 1804 · Tamil
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பயணம் வேதனையில் ஒரு பகுதி யாகும். அது உங்களில் ஒருவரது உணவையும் பானத்தையும் உறக்கத்தை யும் தடுத்துவிடுகிறது. எனவே, ஒருவர் தமது தேவையை முடித்ததும் தம் குடும்பத்தாரிடம் விரைந்து செல்லட்டும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
Sahih al-Bukhari · 1805 · Tamil
அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் மக்கா செல்லும் வழியில் நானும் அவர்களுடன் (பயணம் செய்துகொண்டு) இருந்தேன். (அவர்களின் துணைவியார்) ஸஃபிய்யா பின்த் அபீஉபைத் அவர்களின் உடல்நிலை மோசமான செய்தி அவர்களுக்குக் கிடைத்தது. உடனே பயணத்தை விரைவுபடுத்தினார்கள். செம்மேகம் மறையும்வரை (மஃக்ரிப்…
Sahih al-Bukhari · 1806 · Tamil
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், (மக்காவில் அரசியல்) குழப்பம் இருந்த காலத்தில் உம்ராவிற்காக மக்கா விற்குப் புறப்பட்டார்கள். “நான் கஅபா விற்குச் செல்ல விடாமல் தடுக்கப்பட்டால், நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (தடுக்கப்பட்டபோது) செய்ததைப் போன்று செய்வேன்” என்று…
Sahih al-Bukhari · 1807 · Tamil
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (மக்காவின் ஆட்சியராக இருந்த) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள்மீது (போர் தொடுப்பதற்காக ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபின்) படைகள் வந்திறங்கியிருந்த நாட்களில் (ஹஜ் செய்ய விரும்பிய) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் (அன்னாரின் புதல்வர்களான) உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்),…
Sahih al-Bukhari · 1808 · Tamil
Narrated Nafi`:Some of the sons of `Abdullah told him (i.e. `Abdullah) if he had stayed (and not performed Hajj that year)
Not available in Tamil yet — showing English.
Sahih al-Bukhari · 1809 · Tamil
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கஅபாவிற்குச் செல்ல முடியாமல்) தடுக்கப் பட்டபோது, தமது தலையை மழித்துக் கொண்டு, தம் துணைவியருடன் தாம்பத் திய உறவு கொண்டு, தமது பலிப் பிராணி யையும் அறுத்துப் பலியிட்டார்கள்; அடுத்த ஆண்டு உம்ரா செய்தார்கள்.…
Sahih al-Bukhari · 1810 · Tamil
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் வழிமுறை உங்களுக்குப் போதாதா? உங்களில் ஒருவர் ஹஜ்ஜிலிருந்து தடுக்கப் பட்டால். (முடிந்தால்) அவர் கஅபாவை தவாஃப் செய்து, ஸஃபா-மர்வாவுக் கிடையே ‘சயீ’ செய்து, இஹ்ராமிலிருந்து விடுபடட்டும்! அடுத்த ஆண்டு ஹஜ் செய்து பலியிடட்டும்!…
Sahih al-Bukhari · 1811 · Tamil
மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உம்ராவிலிருந்து தடுக்கப்பட்டபோது) தலையை மழித்துக்கொள்வதற்குமுன் (பலிப்பிராணியை) அறுத்துப் பலியிட்டார் கள்; அவ்வாறே செய்யும்படி தம் தோழர் களுக்கும் கட்டளையிட்டார்கள். அத்தியாயம் :
Sahih al-Bukhari · 1812 · Tamil
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் (அவர்களின் புதல்வர்கள்) சாலிம், அப்துல்லாஹ் (ரஹ்) ஆகியோர் (குழப்பமான சூழ்நிலையில் ஹஜ்ஜுக்குச் செல்வது குறித்துப்) பேசினார்கள். அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள், “நாங்கள் நபி (ஸல்) அவர்களு டன் உம்ரா செய்வதற்காகப் புறப்பட்டோம்;…
Sahih al-Bukhari · 1813 · Tamil
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (அரசியல்) குழப்பம் ஏற்பட்டிருந்த போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் உம்ரா செய்வதற்காக மக்கா புறப்பட்டார்கள். அப்போது “கஅபாவுக்குச் செல்ல விடாமல் நான் தடுக்கப்பட்டால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு டன் (சென்றபோது) நாங்கள் செய்ததைப் போன்று செய்வோம்” என்றார்கள்.…
Sahih al-Bukhari · 1814 · Tamil
கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (உம்ராவிற்காக நான் இஹ்ராம் கட்டியிருந்தபோது) என்னிடம் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “உமது (தலையிலுள்ள) பேன்கள் உமக்குத் துன்பம் தருகின்றனவா?” என்று கேட்டார் கள். நான் “ஆம்! அல்லாஹ்வின் தூதரே!” என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்)…
Sahih al-Bukhari · 1815 · Tamil
கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (நான் இஹ்ராம் கட்டியிருந்தபோது) ஹுதைபியாவில் என்னருகில் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்றார்கள். என் தலையிலிருந்து பேன்கள் உதிர்ந்து கொண்டிருந்தன. அப்போது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “உமது (தலை யிலுள்ள) பேன்கள் உமக்குத் துன்பம்…
Sahih al-Bukhari · 1816 · Tamil
அப்துல்லாஹ் பின் மஅகல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தேன்; (ஹஜ்ஜில் ஏற்படும் குறைகளுக்குப்) பரிகாரம் பற்றி அவர்களிடம் கேட்டேன்; அதற்கு அவர்கள், “என் தொடர்பாகவே அந்த இறைவசனம் (2:196) அருளப்பெற்றது; என்றாலும், அது உங்கள் அனைவருக்கும் பொதுவானதே! பேன்கள்…
Sahih al-Bukhari · 1817 · Tamil
கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (உம்ராவுக்கு இஹ்ராம் கட்டியிருந்த) என் முகத்தில் பேன்கள் விழுந்து கொண் டிருந்தபோது என்னை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். “உமது (தலையிலுள்ள) பேன்கள் உமக்குத் துன்பம் தருகின்றனவா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். நான் ஹுதைபியாவில் இருந்தபோது,…
Sahih al-Bukhari · 1818 · Tamil
Narrated Ka'b bin 'Ujra (ra):Allah's Messenger (ﷺ) saw him (i.e. Ka'b) while the lice were falling on his face
Not available in Tamil yet — showing English.
Sahih al-Bukhari · 1819 · Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தாம்பத்திய உறவு கொள்ளாமலும் எந்தப் பாவமும் செய்யாமலும் யார் இந்த ஆலயத்தை ஹஜ் செய்கிறாரோ அவர் அன்று பிறந்த பாலகனைப் போன்று திரும்புகிறார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
Sahih al-Bukhari · 1820 · Tamil
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தாம்பத்திய உறவு கொள்ளாமலும் எந்தப் பாவமும் செய்யாமலும் இந்த ஆலயத்தை ஹஜ் செய்கிறாரோ அவர் அன்று பிறந்த பாலகனைப் போன்று திரும்புகிறார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
Sahih al-Bukhari · 1821 · Tamil
அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஹுதைபியா ஆண்டில் (மக்கா வுக்குப்) புறப்பட்டேன். என் தோழர்கள் இஹ்ராம் கட்டியிருந்தனர்; நான் இஹ்ராம் கட்டவில்லை. எதிரிகள் நபி (ஸல்) அவர்கள்மீது படையெடுத்து வரவிருக்கிறார்கள் என்று நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிக் கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் (அந்தப் படையை…
Sahih al-Bukhari · 1822 · Tamil
அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹுதைபியா (ஒப்பந்தம் நடந்த ஹிஜ்ரீ ஆறாவது) ஆண்டில் நபி (ஸல்) அவர் களுடன் நாங்கள் சென்றோம். அவர் களின் தோழர்கள் (உம்ராவுக்காக) இஹ்ராம் கட்டியிருந்தனர். ‘ஃகைகா’ எனும் இடத்தில் எதிரிகள் இருப்பதாக எங்களுக் குத் தகவல் கிடைத்தது. நாங்கள் அவர்களை நோக்கிச்…
Sahih al-Bukhari · 1823 · Tamil
அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் மதீனாவுக்கு மூன்று (கல்) தொலைவிலுள்ள ‘அல்காஹா’ எனும் இடத்தில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். எங்களில் இஹ்ராம் கட்டியவர்களும் இருந்தனர்; இஹ்ராம் கட்டாதவர்களும் இருந்தனர். என் தோழர்கள் எதையோ உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டேன். நான் கூர்ந்து பார்த்தபோது ஒரு காட்டுக்…
Sahih al-Bukhari · 1824 · Tamil
அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்வதற்காகப் புறப்பட்டார்கள். அவர்களுடன் (மக்களும்) புறப்பட்டனர். அவர்களில் ஒரு சிறு குழுவை, அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் வேறு வழியில் திருப்பிவிட்டார்கள். அவர்களில் நானும் ஒருவன். “நாம் சந்திக்கும்வரை கடலோரமாக நீங்கள் செல்லுங்கள்”…
Sahih al-Bukhari · 1825 · Tamil
ஸஅப் பின் ஜஸ்ஸாமா அல்லைஸீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா-மதீனா இடையிலுள்ள) ‘அப்வா’ அல்லது ‘வத்தான்’ எனும் இடத்தில் இருந்தபோது, நான் அவர்களுக்கு ஒரு காட்டுக் கழுதையை அன்பளிப்பாக வழங்கினேன்; அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டார்கள். என் முகத்தில் ஏற்பட்ட (மாற்றத்)தைக்…
Sahih al-Bukhari · 1826 · Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (தீங்கிழைக்கும்) ஐந்து உயிரினங்களை இஹ்ராம் கட்டியவர் கொன்றால் அவர்மீது குற்றமில்லை. இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Sahih al-Bukhari · 1827 · Tamil
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (தீங்கிழைக்கும் ஐந்து உயிரினங்களை) இஹ்ராம் கட்டியவர் கொல்லலாம் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவர் (ஹஃப்ஸா) எனக்கு அறிவித்தார். அத்தியாயம் :
Sahih al-Bukhari · 1828 · Tamil
ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது: (தீங்கிழைக்கும்) ஐந்து உயிரினங்கள் உள்ளன. அவற்றைக் கொல்பவர்மீது எந்தக் குற்றமும் இல்லை. (நீர்க்)காகம், பருந்து, எலி, தேள், வெறிநாய் ஆகியவை தான் அவை. அத்தியாயம் :
Sahih al-Bukhari · 1829 · Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஐந்து உயிரினங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் தீங்கிழைப்பவை. அவை புனித (ஹரம்) எல்லைக்கு உள்ளேயும் கொல்லப்படும். (நீர்க்)காகம், பருந்து, தேள், எலி, வெறிநாய் ஆகியவைதான் அவை இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
Sahih al-Bukhari · 1830 · Tamil
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் மினாவிலுள்ள ஒரு குகையில் இருந்தோம். அப்போது ‘வல்முர்ஸலாத்’ (ஒன்றன்பின் ஒன்றாக அனுப்பப்படுகின்றவைமீது சத்தியமாக!) என்று தொடங்கும் (77ஆவது) அத்தியாயம் அவர்களுக்கு அருளப் பெற்றது. அதை நான் நபி (ஸல்) அவர் களின் வாயிலிருந்து…