அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் காலணி அணியும்போது முதலில் வலது கால் அணியுங்கள்; அதைக் கழற்றும்போது முதல் இடது காலில் இருந்து கழற்றுங்கள். வலது காலே அணிவதில் முதலாவதாகவும், கழற்றுவதில் இறுதியாகவும் இருக்கட்டும்! இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
Read full narration →
Sahih al-Bukhari · 5856 · Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஒரேயொரு காலணியில் நடக்க வேண்டாம். ஒன்று, இரு காலணிகளையும் ஒருசேரக் கழற்றிவிடுங்கள்; அல்லது இரண்டையும் ஒரு சேர அணிந்து கொள்ளுங்கள். அத்தியாயம் :
Read full narration →
Sahih al-Bukhari · 5857 · Tamil
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் காலணிக்கு இரண்டு வார்கள் இருந்தன. அத்தியாயம் :
Sahih al-Bukhari · 5857
Sahih al-Bukhari · 5858 · Tamil
ஈசா பின் தஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் இரண்டு வார்கள் கொண்ட இரு காலணி களை எங்களுக்குக் காட்டினார்கள். (பின்னர் இது குறித்துக் கூறுகையில்) ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள், ‘‘இதுதான் நபி (ஸல்) அவர்களின் காலணியாகும்” என்று சொன்னார்கள்.74…
Read full narration →
Sahih al-Bukhari · 5859 · Tamil
அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பதனிடப்பட்ட தோலால் ஆன ஒரு சிவப்புக் கூடாரத் தில் இருந்தபோது நான் அவர்களிடம் சென்றேன். பிலால் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்த தண்ணீரை எடுத்ததை நான் பார்த்தேன். மக்கள் அந்தத்…
Read full narration →
Sahih al-Bukhari · 5860 · Tamil
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளுக்கு ஆளனுப்பி அவர்களைப் பதனிடப் பட்ட தோல் கூடாரத்தில் ஒன்று திரட்டி னார்கள்.76 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Read full narration →
Sahih al-Bukhari · 5861 · Tamil
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ரமளான் மாதத் தில்) இரவு நேரத்தில் ஒரு பாயை அறை போல் ஆக்கிக்கொண்டு (அதில்) தொழு வார்கள். அதைப் பகல் நேரத்தில் (கீழே) விரித்துக்கொண்டு அதன்மீது அமர் வார்கள். மக்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கி வந்து…
Read full narration →
Sahih al-Bukhari · 5862 · Tamil
மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) மக்ரமா (ரலி) அவர்கள் என்னிடம், ‘‘என் அன்பு மகனே! நபி (ஸல்) அவர்களிடம் மேலங்கிகள் சில வந்திருப்பதாகவும் அவற்றை அவர்கள் (மக்களிடையே) பங்கிட்டுக்கொண்டி ருப்பதாகவும் எனக்குச் செய்தி எட்டி யுள்ளது. ஆகவே, எம்மை அவர்களிடம் அழைத்துச்…
Read full narration →
Sahih al-Bukhari · 5863 · Tamil
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘பொன் மோதிரம்’ அல்லது ‘தங்க வளையம்’, சாதாரணப் பட்டு, தடித்தப் பட்டு, அலங்காரப் பட்டு, சிவப்பு மென்பட்டுத் திண்டு (மீஸரா), பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை, வெள்ளிப் பாத்திரம் ஆகிய ஏழு பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என்று நபி…
Read full narration →
Sahih al-Bukhari · 5864 · Tamil
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பொன் மோதிரத்தை அணிய வேண்டாமென்று (ஆண்களுக்குத்) தடை விதித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Read full narration →
Sahih al-Bukhari · 5865 · Tamil
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பொன் மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து)கொண்டார்கள். அதன் குமிழைத் தமது உள்ளங்கையை ஒட்டியவாறு (உள்பக்கமாக அமையும்படி) வைத்துக்கொண்டார்கள். (இதைக் கண்ட) மக்களும் (அதைப் போன்று) மோதிரம் செய்து (அணிந்து)கொண்டார்கள். (இதைக் கண்ட) நபி…
Read full narration →
Sahih al-Bukhari · 5866 · Tamil
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘பொன் மோதிரம்’ அல்லது ‘வெள்ளி மோதிரம்’ ஒன்றைத் தயாரித்து (அணிந்து) கொண்டார்கள். அதன் குமிழைத் தமது உள்ளங்கையை ஒட்டியவாறு (உள்பக்கமாக அமையும்படி) வைத்துக்கொண்டார்கள். அதில் ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ (அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்) என்று (இலச்சினை)…
Read full narration →
Sahih al-Bukhari · 5867 · Tamil
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பொன் மோதிரம் ஒன்றை அணிந்து கொண்டிருந்தார்கள். பிறகு அதை(க் கழற்றி) எறிந்துவிட்டு, ‘‘நான் இதை இனி ஒருபோதும் அணியமாட்டேன்” என்று சொன்னார்கள். மக்களும் தங்களின் (பொன்) மோதிரங்களை(க் கழற்றி) எறிந்து விட்டார்கள். அத்தியாயம்…
Read full narration →
Sahih al-Bukhari · 5868 · Tamil
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கையில் வெள்ளி மோதிரம் ஒன்றை நான் கண்டேன். பிறகு மக்கள், (அதைப் போன்று) வெள்ளி மோதிரங்களைச் செய்து (அணிந்து)கொண்டார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முதலில் அணிந்திருந்த) தமது (பொன்)…
Read full narration →
Sahih al-Bukhari · 5869 · Tamil
ஹுமைத் அத்தவீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் (ரலி) அவர்களிடம், ‘‘நபி (ஸல்) அவர்கள் மோதிரம் எதையேனும் தயாரித்(து அணிந்)திருந்தார்களா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவில் இஷா தொழுகையைப் பாதி இரவு வரை தாமதப்படுத்தினார்கள். (பின்னர் தொழுவித்தார்கள்.) பிறகு அவர்கள்…
Read full narration →
Sahih al-Bukhari · 5870 · Tamil
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் மோதிரம் வெள்ளியால் ஆனதாக இருந்தது. அதன் (கல் பதிக்கும்) குமிழும் வெள்ளியில் ஆனதாகவே இருந்தது. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Read full narration →
Sahih al-Bukhari · 5871 · Tamil
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களி டம் வந்து, ‘‘என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட (மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்துகொள்ள)வே வந்துள்ளேன்” என்று சொல்லிவிட்டு நீண்ட நேரம் நின்றுகொண்டிருந்தார். நபி (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்துவிட்டுப் பார்வையைத் தாழ்த்திக்கொண்டார்கள்.…
Read full narration →
Sahih al-Bukhari · 5872 · Tamil
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அரபியரல்லாதவர்களான (கிழக்கு ரோம் நாட்டைச் சேர்ந்த) ‘ஒரு குழுவினருக்கு’ அல்லது ‘மக்களில் சிலருக்கு’க் கடிதம் எழுத விரும்பினார் கள். அப்போது நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அரபியரல்லாதோர் முத்திரையுள்ள கடிதத்தையே ஏற்றுக்கொள்வார்கள்” என்று சொல்லப்பட்டது. உடனே…
Read full narration →
Sahih al-Bukhari · 5873 · Tamil
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து)கொண்டார்கள். அது (அவர் களின் வாழ்நாளில்) அவர்களது கையில் இருந்தது. பிறகு, அபூபக்ர் (ரலி) அவர்களின் கையில் இருந்தது. பிறகு, உமர் (ரலி) அவர்களது கையில் இருந்தது. பிறகு,…
Read full narration →
Sahih al-Bukhari · 5874 · Tamil
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மோதிரம் ஒன்றை தயார் செய்து, ‘‘நாம் மோதிரம் ஒன்றை தயார் செய்துள்ளோம். அதில் (‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்ற) இலச்சினை ஒன்றைப் பொறித்துள்ளோம். ஆகவே, அதைப் போன்று வேறெவரும் இலச்சினை பொறிக்க வேண்டாம்” என்று சொன்னார்கள். நபி (ஸல்)…
Read full narration →
Sahih al-Bukhari · 5875 · Tamil
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (பைஸாந்திய) கிழக்கு ரோமானியருக்குக் கடிதம் எழுத விரும்பியபோது அவர்களிடம், ‘‘தங்கள் கடிதம் முத்திரையிடப்படாமலிருந்தால் அதை ரோமானியர் ஒருபோதும் படிக்கமாட்டார்கள்” என்று கூறப்பட்டது. ஆகவே, நபி (ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயார் செய்தார்கள்.…
Read full narration →
Sahih al-Bukhari · 5876 · Tamil
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பொன் மோதிரம் ஒன்றைச் செய்து, அதன் குமிழைத் தமது உள்ளங்கைப் பக்கமாக வைத்து அணிந்துகொண்டார்கள். மக்களும் (அவ்வாறே) பொன் மோதிரங்களைச் செய்தனர். (இதற்கிடையில் ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையில் (மிம்பரில்) ஏறி,…
Read full narration →
Sahih al-Bukhari · 5877 · Tamil
அனஸ் பின் மாக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைச் செய்து, அதில் ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ (அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்) என்று இலச்சினை பொறித்தார்கள். மேலும், ‘‘நான் வெள்ளி மோதிரம் ஒன்றைச் செய்து, அதில் ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என இலச்சினை…
Read full narration →
Sahih al-Bukhari · 5878 · Tamil
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூபக்ர் (ரலி) அவர்கள் கலீஃபா (ஆட்சித் தலைவராக) ஆக்கப்பட்டபோது, அவர்கள் (ஸகாத்தின் அளவை விளக்கி) எனக்குக் கடிதம் எழுதினார்கள். அப்போது (அதில் காணப்பட்ட) மோதிர (முத்திரையின்) இலச்சினை மூன்று வரிகள் கொண்டதாயிருந்தது. ‘முஹம்மத்’ என்பது ஒரு வரியிலும், ‘ரசூல்’ என்பது ஒரு…
Read full narration →
Sahih al-Bukhari · 5879 · Tamil
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் மோதிரம் (அவர்களது வாழ்நாளில்) அவர்களின் கரத்திலேயே இருந்தது. அவர்களுக்குப் பின் அபூபக்ர் (ரலி) அவர்களின் (ஆட்சிக் காலத்தில் அபூபக்ரின்) கரத்தில் இருந்தது. அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப்பின் உமர் (ரலி) அவர்களின் (ஆட்சிக் காலத்தில் உமரின்) கரத்தில் இருந்தது.…
Read full narration →
Sahih al-Bukhari · 5880 · Tamil
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் (நோன்புப்) பெருநாளி(ன் தொழுகையி)ல் கலந்து கொண்டேன். அவர்கள் (அன்று) உரையாற்றுவதற்கு முன்பாகத் தொழுதார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இப்னு வஹ்ப் (ரலி)…
Read full narration →
Sahih al-Bukhari · 5881 · Tamil
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பெருநாளன்று (தொழுகைத் திடலுக்குப்) புறப்பட்டுவந்து இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அதற்கு முன்பும் பின்பும் (தொழுகை எதுவும்) தொழவில்லை. பிறகு பெண்களிடம் வந்து தர்மம் செய்யும்படி அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். உடனே பெண்கள் தங்கள் காதணிகளையும் நறுமண மாலைகளையும்…
Read full narration →
Sahih al-Bukhari · 5882 · Tamil
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (என்னிடமிருந்து) அஸ்மா (ரலி) அவர்களின் மாலையொன்று (பனூ முஸ்தலிக் போரிலிருந்து திரும்பும் வழியில்) தொலைந்து போய்விட்டது. நபி (ஸல்) அவர்கள் அதைத் தேடும்படி சிலரை அனுப்பிவைத்தார்கள். (தேடிச் சென்றபோது) தொழுகை நேரம் வந்து விட்டது. அவர்களிடம் அங்கத் தூய்மை (உளூ) செய்யத்…
Read full narration →
Sahih al-Bukhari · 5883 · Tamil
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நோன்புப்) பெருநாளன்று நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழு தார்கள். அதற்கு முன்பும் சரி; அதற்குப் பின்பும் சரி அவர்கள் (கூடுதலாக) எதையும் தொழவில்லை. பிறகு பிலால் (ரலி) அவர்களுடன் பெண்களிடம் (மகளிர் பகுதிக்கு) வந்து தர்மம் செய்யும்படி…
Read full narration →
Sahih al-Bukhari · 5884 · Tamil
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் மதீனா கடைவீதிகளில் ஒன்றில் (‘பனூ கைனுகா’ கடைவீதியில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் (ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டுக்குச்) செல்லவே நானும் (அவர்களுடன்) சென்றேன். (வீட்டுக்கு வந்ததும்,) ‘‘பொடியன் எங்கே?” என்று மும்முறை கேட்டார்கள். பிறகு ‘‘அலீயின்…