ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: கைபர் போரின்போது நபி (ஸல்) அவர்கள் (நாட்டுக்) கழுதைகளின் இறைச்சியை உண்ண வேண்டாமெனத் தடை செய்தார்கள். குதிரையின் இறைச்சியை உண்ண அனுமதியளித்தார்கள்.39 இதை முஹம்மத் பின் அலீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள் அத்தியாயம் :
Read full narration →
Sahih al-Bukhari · 5521 · Tamil
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கைபர் போரின் போது நாட்டுக் கழுதைகளின் இறைச் சியை உண்ணக் கூடாதெனத் தடை விதித்தார்கள்.41 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Read full narration →
Sahih al-Bukhari · 5522 · Tamil
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நாட்டுக் கழுதை களின் இறைச்சியை உண்ண வேண்டா மெனத் தடை செய்தார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Read full narration →
Sahih al-Bukhari · 5523 · Tamil
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: கைபர் போர் நடந்த ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இனி(த் தவணை முறைத் திருமணமான) ‘முத்ஆ’ செய்யக் கூடாது என்றும், நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ண வேண்டாமென்றும் தடை விதித்தார்கள்.42 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Read full narration →
Sahih al-Bukhari · 5524 · Tamil
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கைபர் போரின் போது (நாட்டுக்) கழுதைகளின் இறைச் சியை உண்ண வேண்டாமென்று தடை செய்தார்கள். குதிரைகளின் இறைச்சியை உண்ண அனுமதியளித்தார்கள்.43 அத்தியாயம் :
Read full narration →
Sahih al-Bukhari · 5525 · Tamil
பராஉ (ரலி) அவர்களும் இப்னு அபீஅவ்ஃபா (ரலி) அவர்களும் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (நாட்டுக்) கழுதைகளின் இறைச்சியை உண்ண வேண்டாமெனத் தடை செய்தார்கள்.44 அத்தியாயம் :
Sahih al-Bukhari · 5525
Sahih al-Bukhari · 5526 · Tamil
பராஉ (ரலி) அவர்களும் இப்னு அபீஅவ்ஃபா (ரலி) அவர்களும் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (நாட்டுக்) கழுதைகளின் இறைச்சியை உண்ண வேண்டாமெனத் தடை செய்தார்கள்.44 அத்தியாயம் :
Sahih al-Bukhari · 5526
Sahih al-Bukhari · 5527 · Tamil
அபூஸஅலபா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாட்டுக் கழுதைகளின் இறைச்சிக்குத் தடை விதித்தார்கள். இந்த ஹதீஸ் எட்டு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியிருப்பதாவது: நபி (ஸல்) அவர்கள், (வன) விலங்கு களில் கோரைப்…
Read full narration →
Sahih al-Bukhari · 5528 · Tamil
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (கைபர் போரின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘‘கழுதைகள் உண்ணப்பட்டு விட்டன” என்று சொன்னார். பிறகு ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘கழுதைகள் உண்ணப்பட்டுவிட்டன” என்று சொன்னார். மீண்டும் ஒருவர் வந்து, ‘‘கழுதை இறைச்சி…
Read full narration →
Sahih al-Bukhari · 5529 · Tamil
அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஜாபிர் பின் ஸைத் (ரஹ்) அவர்களிடம் ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாட்டுக் கழுதைகளை உண்ணக் கூடாதெனத் தடை செய்திருப்பதாக (மக்கள்) கருதுகிறார்களே” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஹ(க்)கம் பின் அம்ர் அல்கிஃபாரீ (ரலி) அவர்கள்…
Read full narration →
Sahih al-Bukhari · 5530 · Tamil
அபூஸஅலபா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வன) விலங்குகளில் கோரைப் பற்கள் உள்ள எதையும் உண்ணக் கூடாதெனத் தடை விதித்தார்கள்.46 இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Read full narration →
Sahih al-Bukhari · 5531 · Tamil
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செத்த ஆடு ஒன்று கிடந்த வழியாகச் சென்றார்கள். அப்போது ‘‘இதன் தோலால் நீங்கள் பயனடையக் கூடாதா?” என்று கேட்டார்கள். மக்கள் ‘‘இது செத்துப்போன தாயிற்றே!” என்று கேட்க, அதற்கு அவர்கள், ‘‘இதை உண்பதுதான்…
Read full narration →
Sahih al-Bukhari · 5532 · Tamil
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செத்துப்போன பெட்டை வெள்ளாடு ஒன்று கிடந்த வழியாகச் சென்றார்கள். அப்போது ‘‘இதன் தோலால் பயன் அடைவதால் இதன் உரிமையாளர்மீது குற்றம் ஏதுமில்லை” என்று சொன் னார்கள். அத்தியாயம் :
Read full narration →
Sahih al-Bukhari · 5533 · Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் வழியில் (அறப் போரில்) காயப்படுத்தப்பட்டவர் தமது காயத்தில் இரத்தம் வழிய, மறுமை நாளில் (இறைவன் முன்னால்) வருவார். அவரது (காயத்திலிருந்து வழியும் திரவத்தின்) நிறம் இரத்த(ச் சிவப்பு) நிறமாயிருக்கும்; (அதன்) மணமோ கஸ்தூரி மணமாயிருக்கும். இதை அபூஹுரைரா (ரலி)…
Read full narration →
Sahih al-Bukhari · 5534 · Tamil
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நல்ல நண்பன் மற்றும் கெட்ட நண்பனின் நிலையானது கஸ்தூரியைச் சுமக்கின்றவனின் நிலையையும், (உலைக் களத்தில்) உலை ஊதுகின்றவனின் நிலையையும் ஒத்திருக்கிறது. கஸ்தூரியைச் சுமப்பவன் ஒன்று அதை உனக்கு அன்பளிப்பாக வழங்கலாம். அல்லது நீ அவனிடமிருந்து (அதை விலைக்கு) வாங்கிக்கொள்ளலாம். அல்லது அதிலிருந்து…
Read full narration →
Sahih al-Bukhari · 5535 · Tamil
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ‘மர்ருழ் ழஹ்ரான்’ எனுமிடத்தில் இருந்தபோது முயல் ஒன்றைத் துரத்திச் சென்றோம். மக்கள் அதைப் பிடிக்க முயன்று களைத்துவிட்டனர். நான் அதைப் பிடித்து (என் வளர்ப்புத் தந்தை) அபூதல்ஹா (ரலி) அவர்களிடம் கொடுத்தேன். அவர்கள் அதை அறுத்து ‘அதன் இரண்டு பின்சப்பைகளையும்’…
Read full narration →
Sahih al-Bukhari · 5536 · Tamil
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உடும்பை நான் உண்ணவுமாட்டேன்; அதை (உண்ண வேண்டாமென) நான் தடை செய்யவுமாட்டேன். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
Sahih al-Bukhari · 5536
Sahih al-Bukhari · 5537 · Tamil
காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (அன்னாரின் துணைவி யாரும் என் சிறிய தாயாருமான) மைமூனா (ரலி) அவர்களது இல்லத்திற்குச் சென்றேன். அப்போது பொரிக்கப்பட்ட உடும்புக் கறி கொண்டுவரப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கரத்தை அந்த…
Read full narration →
Sahih al-Bukhari · 5538 · Tamil
மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) எலி ஒன்று நெய்யில் விழுந்து இறந்துவிட்டது. (அந்த நெய்யை உண்ணலாமா? என்று) அது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘(உடனே) அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் (எடுத்து) எறிந்துவிட்டு, அ(தில் மீதியுள்ள)தை…
Read full narration →
Sahih al-Bukhari · 5539 · Tamil
யூனுஸ் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம், எலி போன்ற உயிரினம் உறைந்த அல்லது உறையாத எண்ணெய் மற்றும் நெய் ஆகியவற்றில் விழுந்து இறந்துவிட்டால் (அப்பொருளை உண்ணலாமா?) என்பது குறித்து வினவப்பட்டது. அவர்கள், ‘‘அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள்…
Read full narration →
Sahih al-Bukhari · 5540 · Tamil
மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் நெய்யில் விழுந்து (செத்து)விட்ட எலி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ‘‘(உடனே) அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் (எடுத்து) எறிந்துவிட்டு (மீதி நெய்யை) உண்ணுங்கள்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
Read full narration →
Sahih al-Bukhari · 5541 · Tamil
சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள் பிராணியின் முகத்தில் அடையாள மிடுவதை வெறுத்தார்கள். மேலும் அவர்கள், ‘‘பிராணிகளை அடிப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்” என்றும் கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில் ‘‘(பிராணிகளின்) முகத்தில் அடிப்பதற்கு...” என வந்துள்ளது.55 அத்தியாயம் :
Read full narration →
Sahih al-Bukhari · 5542 · Tamil
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் என் (தாய்வழிச்) சகோதரன் ஒருவனை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றேன். நபியவர்கள் இனிப்புப் பொருளை மென்று (குழந்தை யாயிருந்த) அவனது வாயிலிடுவதற்காக அவனை நான் கொண்டுசென்றபோது அவர்கள் தமது (ஆட்டுத்) தொழுவம் ஒன்றில் இருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள்…
Read full narration →
Sahih al-Bukhari · 5543 · Tamil
ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘(அல்லாஹ்வின் தூதரே! நாம் உணவுக்காக ஒட்டகங்களை அறுக்க நம் வாட்களை இன்று பயன்படுத்திவிட்டால், அவற்றின் கூர் மழுங்கி) நாளை நம்மிடம் (கூரான) வாட்களே இல்லாத நிலையில் எதிரியைச் சந்திக்க வேண்டிவருமே” என்று கேட்டேன்.…
Read full narration →
Sahih al-Bukhari · 5544 · Tamil
ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஒரு பயணத்தில் இருந்தோம். அப்போது ஒட்டகக் கூட்டத்திலிருந்து ஓர் ஒட்டகம் வெருண்டோடியது. அப்போது ஒரு மனிதர் அம்புகளை அதன் மீது எய்து அதைத் தடுத்து நிறுத்தினார். பிறகு நபி (ஸல்) அவர்கள் ‘‘வனவிலங்குகளில்…
Read full narration →
Sahih al-Bukhari · 5545 · Tamil
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஈதுல் அள்ஹா பெருநாள் உரையில்) நபி (ஸல்) அவர்கள், ‘‘இன்றைய தினம் நாம் முதலாவதாகச் செய்ய வேண்டியது யாதெனில், முதலில் நாம் (பெருநாள் தொழுகை) தொழுவோம்; பிறகு தொழுகையிலிருந்து திரும்பிச் சென்று குர்பானி பிராணிகளை அறுப்போம். இதை யார்…
Read full narration →
Sahih al-Bukhari · 5546 · Tamil
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ‘‘யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்னால் (பிராணியை) அறுக்கின்றாரோ அவர் தம(து சொந்தத் தேவை)க்காகவே அறுத்தவர் ஆவார். யார் தொழுகைக்குப் பின்னால் அறுக்கின் றாரோ அவரது (குர்பானி) வழிபாடு பூர்த்தியாகிவிடும்; மேலும், அவர் முஸ்லிம் களின்…
Read full narration →
Sahih al-Bukhari · 5547 · Tamil
உக்பா பின் ஆமிர் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தம் தோழர் களிடையே குர்பானி பிராணிகளைப் பங்கிட்டார்கள். அப்போது எனக்கு (எனது பங்காக ஆறு மாதம் முதல்) ஒரு வயதுக்குட்பட்ட வெள்ளாட்டுக் குட்டி ஒன்று கிடைத்தது. நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஒரு வயதுக்குட்பட்ட…
Read full narration →
Sahih al-Bukhari · 5548 · Tamil
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக் குச் சென்றிருந்தபோது) நான் மக்காவினுள் நுழையும்முன் ‘சரிஃப்’ எனுமிடத்தில் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான் அழுது கொண்டிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் ‘‘உனக்கென்ன ஆயிற்று? உனக்கு…
Read full narration →
Sahih al-Bukhari · 5549 · Tamil
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘ஈதுல் அள்ஹா’ பெருநாளன்று நபி (ஸல்) அவர்கள் ‘‘யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்து விட்டாரோ அவர் மறுபடியும் குர்பானி கொடுக்கட்டும்” என்று சொன்னார்கள். அப்போது ஒரு மனிதர் (அபூபுர்தா) எழுந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! இது, இறைச்சி…