காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (அடிமைப் பெண்ணாயிருந்து விடுதலை பெற்ற) பரீரா (ரலி) அவர்களின் விஷயத்தில் மூன்று வழிமுறைகள் கிடைத்தன: 1. (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்கள் அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்ய விரும்பினார்கள். அப்போது பரீராவின் உரிமையாளர்கள், ‘‘அவளுடைய வாரிசுரிமை (‘வலா’)…
Read full narration →
Sahih al-Bukhari · 5431 · Tamil
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இனிப்புப் பண்டத்தையும் தேனையும் விரும்பிவந்தார்கள். அத்தியாயம் :
Sahih al-Bukhari · 5431
Sahih al-Bukhari · 5432 · Tamil
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (‘நபிமொழிகளை அதிகமாக அபூஹுரைரா அறிவிக்கிறாரே’ என்று மக்கள் -என்னைப் பற்றிக் குறை- கூறிக்கொண்டிருந்தார்கள்.) நான் என் வயிறு நிரம்பினால் போதும் என்று நபி (ஸல்) அவர்களுடனேயே எப்போதும் இருந்துவந்தேன். அந்தக் காலகட்டத்தில் புளித்து உப்பிய (உயர்தரமான) ரொட்டியை நான் உண்பதுமில்லை; (மெல்லிய)…
Read full narration →
Sahih al-Bukhari · 5433 · Tamil
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடைய அடிமையும் தையற்காரருமான ஒருவரிடம் சென்றார்கள். அவர்களுக்குச் சுரைக்காய் (உணவு) கொண்டுவரப்பட்டது. அதை நபி (ஸல்) அவர்கள் உண்ணத் தொடங்கினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை (விரும்பி)ச் சாப்பிடுவதைப் பார்த்ததிலிருந்து அதை நானும் விரும்பி(ச்…
Read full narration →
Sahih al-Bukhari · 5434 · Tamil
அபூமஸ்ஊத் உக்பா பின் ஆமிர் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூஷுஐப் என்று அழைக்கப்படும் ஒருவர் அன்சாரிகளில் இருந்தார். அவரிடம் இறைச்சி விற்கும் பணியாளர் ஒருவர் இருந்தார். அவர் அந்தப் பணியாளரிடம், ‘‘எனக்காக உணவு தயாரித்து வை! (ஐந்து பேரை விருந்துக்கு அழைக்கவிருக்கிறேன். அந்த) ஐவரில் ஒருவராக…
Read full narration →
Sahih al-Bukhari · 5435 · Tamil
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (அவர்கள் செல்லுமிட மெல்லாம்) செல்கின்ற சேவகனாக இருந்தேன். (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடைய பணியாளரும் தையற்காரருமான ஒருவரிடம் சென்றார்கள். அவர் உணவும் அதன் மீது சுரைக்காய்க் குழம்பும் உள்ள ஒரு தட்டை…
Read full narration →
Sahih al-Bukhari · 5436 · Tamil
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: தையற்காரர் ஒருவர் நபி (ஸல்) அவர்களைத் தாம் தயாரித்திருந்த உணவி(னை உண்பத)ற்காக அழைத்தார். நானும் நபி (ஸல்) அவர்களுடன் சென்றேன். அவர் தொலிநீக்கப்படாத கோதுமை ரொட்டியையும், சுரைக்காயும் உப்புக்கண்டமும் இருந்த குழம்பையும் நபி (ஸல்) அவர்களின் முன்னால் வைத்தார்.…
Read full narration →
Sahih al-Bukhari · 5437 · Tamil
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் சுரைக்காயும் உப்புக்கண்டமும் உள்ள குழம்பு கொண்டுவரப்பட்டதைக் கண்டேன். அப்போது அவர்கள் சுரைக்காயைத் தேடி உண்பதைப் பார்த்தேன். அத்தியாயம் :
Read full narration →
Sahih al-Bukhari · 5438 · Tamil
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்கள்) அதை (குர்பானி இறைச்சிகளை மூன்று நாட்களுக்கு மேலும் சேமித்து வைத்து உண்பதை) மக்கள் பட்டினியோடு இருந்த ஓர் ஆண்டில்தான் அப்படி(த் தடை) செய்தார்கள். வசதியுள்ளவர் ஏழைக்கு உணவளிக்க வேண்டுமென்று அவர்கள் விரும்பினார்கள். நாங்கள் ஆட்டுக்காலை எடுத்துவைத்துப் பதினைந்து…
Read full narration →
Sahih al-Bukhari · 5439 · Tamil
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: தையற்காரர் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தாம் தயாரித்த உணவி(னை உண்பத)ற்காக அழைத்தார். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அந்த உணவை உண்ணச் சென்றேன். அந்தத் தையற்காரர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அருகே தொலிநீக்கப்படாத…
Read full narration →
Sahih al-Bukhari · 5440 · Tamil
அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் பின் அபீதாப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளரிக்காயுடன் (சேர்த்து) பேரீச்சச் செங்காய்களை உண்பதை நான் கண்டேன். அத்தியாயம் :
Sahih al-Bukhari · 5440
Sahih al-Bukhari · 5441 · Tamil
அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் ஏழு இரவுகள் விருந்தாளியாகத் தங்கியிருந்தேன். அவர்களும் அவர் களுடைய துணைவியாரும் அவர்களுடைய பணியாளும் இரவை மூன்று பங்குகளாகப் பிரித்துக்கொண்டு முறைவைத்து எழுந்து தொழுதுவந்தார்கள். முதலில் ஒருவர் தொழுவார்; பிறகு அவர் மற்றொருவரை எழுப்பிவிடுவார். (அவர் தொழுது…
Read full narration →
Sahih al-Bukhari · 5442 · Tamil
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் இரு கறுப்பு நிறப் பொருள்களான பேரீச்சம்பழம் மற்றும் தண்ணீரால் வயிறு நிரம்பியிருந்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.62 அத்தியாயம் :
Read full narration →
Sahih al-Bukhari · 5443 · Tamil
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: மதீனாவில் யூதர் ஒருவர் இருந்தார். அவர் என் பேரீச்சம்பழங்களுக்காக, அவை இறக்கப்படும் (நாள்)வரை (எனக் கால வரம்பிட்டு) எனக்குக் கடன் கொடுத் திருந்தார். ‘ரூமா’ கிணற்றுச் சாலையிலிருந்த நிலம் எனக்குச் சொந்தமாயிருந்தது. அது விளைச்சல் தரவில்லை. ஆகவே, கடன்…
Read full narration →
Sahih al-Bukhari · 5444 · Tamil
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது பேரீச்சமரத்தின் குருத்து ஒன்று கொண்டுவரப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘மரங்களில் ஒன்று உண்டு. அதன் வளம் முஸ்லிமுக்குள்ள வளத்தைப் போன்றதாகும்” என்று சொன்னார்கள். உடனே நான், ‘‘அவர்கள் பேரீச்சமரத்தைத்தான் குறிப்பிடுகிறார்கள்”…
Read full narration →
Sahih al-Bukhari · 5445 · Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தினந்தோறும் காலையில் (வெறும் வயிற்றில்) ஏழு ‘அஜ்வா’ (ரகப்) பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுகின்றவருக்கு, அந்த நாள் எந்த விஷமும் இடரளிக்காது; எந்தச் சூனியமும் அவருக்கு இடையூறு செய்யாது. இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
Read full narration →
Sahih al-Bukhari · 5446 · Tamil
ஜபலா பின் சுஹைம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் (ஹிஜாஸ் பகுதியின் ஆட்சியாளராக) இருந்தபோது எங்களுக்குப் பஞ்ச ஆண்டு ஏற்பட்டது. அவர்கள் எங்களுக்குப் பேரீச்சம் பழம் கொடுத்தார்கள். நாங்கள் அவற்றைச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் எங்களைக் கடந்து…
Read full narration →
Sahih al-Bukhari · 5447 · Tamil
அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் வெள்ளரிக்காய்களுடன் (சேர்த்து) பேரீச்சச் செங்காய்களை உண்பதை நான் பார்த்திருக்கிறேன்.65 அத்தியாயம் :
Sahih al-Bukhari · 5447
Sahih al-Bukhari · 5448 · Tamil
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மரங்களில் ஒரு மரம் உண்டு. அது முஸ்லிமைப் போன்று (வளமுள்ளது) ஆகும். அதுதான் பேரீச்சமரமாகும். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.66 அத்தியாயம் :
Read full narration →
Sahih al-Bukhari · 5449 · Tamil
அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வெள்ளரிக்காய்களுடன் பேரீச்சச் செங்காய்களையும் ஒன்றாகச் சேர்த்துச் சாப்பிடுவதை நான் பார்த்திருக்கிறேன்.67 அத்தியாயம் :
Read full narration →
Sahih al-Bukhari · 5450 · Tamil
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தாயார் உம்மு சுலைம் (ரலி) அவர்கள் ஒரு ‘முத்(து)’ அளவு தொலிநீக்கப்படாத கோதுமையை எடுத்து நொறுகலாக அரைத்து (பால் கலந்து) கஞ்சி தயாரித்துத் தம்மிடமிருந்த நெய் உள்ள தோல்பை ஒன்றையும் எடுத்து (அதிலிருந்த நெய்யை அந்தக் கஞ்சியில்) ஊற்றினார்கள். பிறகு…
Read full narration →
Sahih al-Bukhari · 5451 · Tamil
அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் (ரலி) அவர்களிடம், ‘‘நபி (ஸல்) அவர்கள் வெள்ளைப்பூண்டு குறித்து என்ன சொல்ல நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்?” என்று வினவப்பட்டது. அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், ‘‘(அதைச்) சாப்பிட்டவர் நம் பள்ளிவாசலை நெருங்க வேண்டாம் எனச் சொன்னார்கள்” என்று…
Read full narration →
Sahih al-Bukhari · 5452 · Tamil
அதாஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘‘வெள்ளைப் பூண்டோ வெங்காயமோ சாப்பிட்டவர் ‘நம்மிடமிருந்து விலகியிருக்கட்டும்’ அல்லது ‘நம் பள்ளிவாசலிலிருந்து விலகி யிருக்கட்டும்’ ‘‘ என்று சொன்னதாக ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.71 அத்தியாயம் :
Read full narration →
Sahih al-Bukhari · 5453 · Tamil
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ‘மர்ருழ் ழஹ்ரான்’ எனுமிடத்தில் (‘கபாஸ்’ எனும்) மிஸ்வாக் மரத்தின் பழத்தைப் பறித்துக்கொண்டி ருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இதில் கறுப்பானதைப் பறியுங்கள்; ஏனெனில், அதுதான் மிகவும் நன்றாக இருக்கும்” என்று…
Read full narration →
Sahih al-Bukhari · 5454 · Tamil
சுவைத் பின் நுஅமான் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கைபருக்குப் புறப்பட்டோம். நாங்கள் ‘ஸஹ்பா’ எனுமிடத்தில் இருந்த போது நபி (ஸல்) அவர்கள் உணவு கொண்டுவரச் சொன்னார்கள். அவர்களிடம் மாவு மட்டுமே கொண்டுவரப்பட்டது. அதை நாங்கள் (அனைவரும்) உண்டோம். பிறகு நபி…
Read full narration →
Sahih al-Bukhari · 5455 · Tamil
சுவைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கைபருக்குச் சென்றோம். நாங்கள் ‘ஸஹ்பா’ எனுமிடத்தில் இருந்தபோது நபி (ஸல்) அவர்கள் உணவு கொண்டுவரச் சொன்னார்கள். மாவு மட்டும்தான் அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. நாங்கள் அவர்களுடன் அதை மென்று உண்டோம். பிறகு தண்ணீர் கொண்டுவரச்…
Read full narration →
Sahih al-Bukhari · 5456 · Tamil
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் சாப்பிட்டால் அவர் தமது கையைத் தாமே உறிஞ்சாமல், அல்லது (மனைவி போன்றவரிடம்) உறிஞ்சத் தராமல் அதை அவர் துடைத்துக் கொள்ள வேண்டாம். இதை இப்னு அப்பாஸ் ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
Read full narration →
Sahih al-Bukhari · 5457 · Tamil
சயீத் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம், ‘‘நெருப்புத் தீண்டிய (சமைத்த) உணவை உண்பதால் (தொழுகைக்காக மீண்டும்) அங்கத் தூய்மை (உளூ) செய்ய வேண்டுமா?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘தேவையில்லை. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அது போன்ற…
Read full narration →
Sahih al-Bukhari · 5458 · Tamil
அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (சாப்பிட்டு முடித்தபின்) தமது உணவு விரிப்பை எடுக்கும் போது, ‘‘அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி, ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தஃக்னன் அன்ஹு ரப்பனா” என்று பிரார்த்திப்பார்கள். (பொருள்: அதிகமான, தூய்மையான, வளமிக்க…
Read full narration →
Sahih al-Bukhari · 5459 · Tamil
அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ‘உணவு உண்ட பின்’ அல்லது ‘தமது உணவு விரிப்பை எடுக்கும்போது’ ‘‘அல்ஹம்து லில்லாஹி கஃபானா வ அர்வானா ஃகைர மக்ஃபிய்யின் வலா மக்ஃபூரின்” என்று கூறுவார்கள். (பொருள்: எங்களுக்குப் போதுமான உணவு அளித்து, எங்களின் தாகம் தணித்த…