Sahih al-Bukhari · 5280 · Tamil
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஆயிஷா (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட) பரீராவின் கணவர் ஓர் அடிமையாக இருந்ததை நான் பார்த்தேன். அத்தியாயம் :
Read something that stays with you.
The first of the two Sahihs — revelation, belief, prayer, knowledge and manners.
Readings 5281–5310 of 7,580
Page 177
Sahih al-Bukhari · 5280 · Tamil
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஆயிஷா (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட) பரீராவின் கணவர் ஓர் அடிமையாக இருந்ததை நான் பார்த்தேன். அத்தியாயம் :
Sahih al-Bukhari · 5281 · Tamil
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: பரீராவின் கணவர் முஃகீஸ் இன்ன குலத்தாரின் அடிமையாவார். அவர் (தம் மனைவி விடுதலையாகி விருப்ப உரிமை அளிக்கப்பட்டபின், தம்மிடமிருந்து பிரிந்துவிடுவதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டபோது) மதீனாவின் தெருக்களில் பரீராவுக்குப் பின்னால் அவருக்காக அழுதவண்ணம் பின்தொடர்ந்து சென்றதை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்…
Sahih al-Bukhari · 5282 · Tamil
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: கறுப்பு அடிமையான பரீராவின் கணவர் முஃகீஸ் இன்ன குலத்தாரின் அடிமையாயிருந்தார். அவர் (தம் மனைவி விடுதலையாகி விருப்ப உரிமை அளிக்கப்பட்டபின், தம்மிடமிருந்து பிரிந்து விடுவதைத் தேர்ந்தெடுத்தபோது) மதீனா வின் தெருக்களில் பரீராவுக்குப் பின்னால் சுற்றிச்சுற்றி வந்ததை இப்போதும் நான் காண்பதைப்…
Sahih al-Bukhari · 5283 · Tamil
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவருக்கு முஃகீஸ் என்று (பெயர்) சொல்லப்படும். அவர் (பரீரா தம்மைப் பிரிந்துவிட நினைக்கிறார் என்பதை அறிந்தபோது) தமது தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுதவண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்ததை இப்போதும் நான்…
Sahih al-Bukhari · 5284 · Tamil
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (அடிமைப் பெண்ணான) பரீராவை விலைக்கு வாங்க விரும்பினேன். பரீராவின் எசமான்கள் (‘வலா’ எனும்) வாரிசுரிமை தங்களுக்கே இருக்க வேண்டும் என நிபந்தனையிட்டு, (இல்லையேல் விற்க முடியாது என) மறுத்தனர். ஆகவே, இதைப் பற்றி நான் நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன்.…
Sahih al-Bukhari · 5285 · Tamil
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒரு முஸ்லிம்) கிறித்தவப் பெண்ணையோ அல்லது யூதப் பெண்ணையோ மணமுடித்துக்கொள்வது தொடர்பாக இப்னு உமர் (ரலி) அவர்களிடம் வினவப் பட்டால், அவர்கள் ‘‘இறைநம்பிக்கையாளர்கள் இணைகற்பிக்கும் பெண்களை மணமுடித்துக்கொள்வதை அல்லாஹ் அனுமதிக்கவில்லை. அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவரான ஈசா (அலை) அவர்களைத் தன்னுடைய இறைவன்…
Sahih al-Bukhari · 5286 · Tamil
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களையும் முஸ்லிம் களையும் பொறுத்தவரையில் இணை வைப்பாளர்கள் இரு வகையினராக இருந்தனர். ஒரு வகை இணைவைப்பாளர் கள் பகைவர்களாக இருந்தனர். அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் போர் புரிவார்கள்; நபியவர்களும் அவர்களுடன் போர் புரிவார்கள். மற்றொரு வகை…
Sahih al-Bukhari · 5287 · Tamil
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூஉமய்யாவின் மகள் ‘குறைபா’ என்பவர் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார். அவரை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் மணவிலக்குச் செய்துவிட்டார்கள். பின்னர் அவரை முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்கள் மணந்துகொண்டார்கள். அபூசுஃப்யான் (ரலி)…
Sahih al-Bukhari · 5288 · Tamil
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘இறைநம்பிக்கையாளர்களே! (இறைமறுப்பாளர்களிலுள்ள) பெண்கள் இறைநம்பிக்கை கொண்டு ஹிஜ்ரத் செய்து (புலம்பெயர்ந்து) உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப்பாருங்கள்...” எனும் (60:10ஆவது) வசனம் முழுமையாக அருளப்பெற்ற காரணத்தால் தம்மிடம் ஹிஜ்ரத் செய்துவரும் இறைநம்பிக்கை கொண்ட பெண்களை நபி (ஸல்)…
Sahih al-Bukhari · 5289 · Tamil
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரை (ஒரு மாத காலம்) நெருங்கமாட்டேன் எனச் சத்தியம் செய்தார்கள். (இந்தக் காலகட்டத்தில்) அவர்களின் காலில் சுளுக்கு ஏற்பட்டிருந் தது. ஆகவே, அவர்கள் தமது மாடியறை யில் இருபத்தொன்பது நாட்கள் தங்கி…
Sahih al-Bukhari · 5290 · Tamil
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ் குறிப்பிட்டுள்ள ‘ஈலா’ (எனும் சத்திய) விஷயத்தில் இப்னு உமர் (ரலி) அவர்கள், ‘‘அந்த (நான்கு மாத கால) தவணை முடிந்துவிட்ட பின்னால் அல்லாஹ் உத்தரவிட்டிருப்பதைப் போன்று ஒருவர் நல்ல முறையில் (தம் மனைவியைத்) தம்மிடம் வைத்துக்கொள்ள வேண்டும்; அல்லது அவளை…
Sahih al-Bukhari · 5291 · Tamil
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான்கு மாதம் முடிந்துவிட்டால், கணவன் மணவிலக்குச் செய்யும்வரை (முடிவு) நிறுத்திவைக்கப்படும். கணவனாக மணவிலக்குச் செய்யும்வரை (ஈலாவில்) மணவிலக்கு நிகழாது. இதே கருத்து நபித்தோழர்களில் உஸ்மான், அலீ, அபுத்தர்தா, ஆயிஷா (ரலி) மேலும் பன்னிரண்டு பேரிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.48 அத்தியாயம் :
Sahih al-Bukhari · 5292 · Tamil
அல்முன்பஇஸ் (ரஹ்) அவர்களின் (முன்னாள்) அடிமையான யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம், வழிதவறி வந்துவிட்ட ஆட்டைப் பற்றி வினவப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் (வினவியவரிடம்), ‘‘அதை நீ பிடித்துக்கொள். ஏனெனில், அது உனக்குரியது; அல்லது உன் சகோதரனுக்குரியது; அல்லது ஓநாய்க்குரியது” என்று பதிலளித்தார்கள்.…
Sahih al-Bukhari · 5293 · Tamil
(இப்னு அப்பாஸ் ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தின் மீதிருந்தபடி (புனித கஅபாவைச்) சுற்றிவந்தார்கள். அந்த (‘ஹஜருல் அஸ்வத்’ கல் இருக்கும்) மூலைக்கு வரும்போதெல்லாம் அதனை நோக்கி (தமது கையிலுள்ள ஒரு பொருளால் முத்தமிடுவதுபோல்) சைகை செய்தபடி ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ்…
Sahih al-Bukhari · 5294 · Tamil
அபுல் காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெள்ளிக்கிழமையன்று ஒரு நேரம் இருக்கிறது; அந்த நேரத்தை ஒரு முஸ்லிம் அடியார் (சரியாக) அடைந்து, அதில் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எந்த நன்மையைக் கோரினாலும், அவருக்கு அதை அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை. இதைக் கூறும்போது நபி (ஸல்) அவர்கள் தம்…
Sahih al-Bukhari · 5295 · Tamil
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் யூதர்களில் ஒருவன் ஒரு சிறுமியின் (கழுத்தில் கிடந்த) வெள்ளிக் காசு மாலையைப் பறித்துக்கொண்டு அவளது மண்டையை உடைத்துவிட்டான். உயிர் ஊசலாடிக்கொண்டிருந்த அவளை உடனே அவளுடைய குடும்பத்தார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்…
Sahih al-Bukhari · 5296 · Tamil
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கிழக்குத் திசையை நோக்கி சைகை செய்து, ‘‘இங்கிருந்துதான் குழப்பம் தோன்றும்” என்று சொல்லக் கேட்டேன்.64 அத்தியாயம் :
Sahih al-Bukhari · 5297 · Tamil
அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (மக்கா வெற்றியின்) பயணத்தில் இருந்துகொண்டிருந்தோம். (அப்போது அவர்கள் ரமளான் நோன்பு நோற்றி ருந்தார்கள்.) சூரியன் மறைந்ததும் ஒரு மனிதரிடம் நபி (ஸல்) அவர்கள், ‘‘இறங்கிச் சென்று எனக்காக மாவு கரைப்பீராக!” என்று சொன்னார்கள்.…
Sahih al-Bukhari · 5298 · Tamil
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் சஹர் உணவு உண்பதிலிருந்து ‘பிலாலின் அழைப்பு’ அல்லது ‘பிலாலின் (தொழுகை) அறிவிப்பு’ உங்களைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில் ‘அவர் அழைப்பது’ அல்லது ‘அவர் (தொழுகை) அறிவிப்புச் செய்வது’, உங்களில் (இரவுத்) தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருப்போர் திரும்பி வருவதற்காகத்தான்; ‘சுப்ஹ்’ அல்லது ‘ஃபஜ்ர்’…
Sahih al-Bukhari · 5299 · Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (செலவே செய்யாத) கஞ்சன், செலவு செய்கின்ற (தாராள மனம் படைத்த)வன் ஆகிய இருவரின் நிலையானது, இரு மனிதர்களின் நிலை போன்றதாகும். அவ்விருவரும் தமது மார்பிலிருந்து கழுத்தெலும்புவரை இரும்பாலான நீளங்கி அணிந்துள்ளனர். செலவு செய்கின்றவர் எதைச் செலவு செய்தாலும் அவரது அங்கி…
Sahih al-Bukhari · 5300 · Tamil
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்ததை உங்களுக்குத் தெரிவிக்கட்டுமா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். மக்கள், ‘‘ஆம்! (தெரிவியுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினர். ‘‘(அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்தது,) பனூ நஜ்ஜார் குடும்ப மாகும். பிறகு…
Sahih al-Bukhari · 5301 · Tamil
சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நானும் மறுமையும் ‘இதிலிருந்து இதைப் போல்’ அல்லது ‘இந்த இரண்டையும்போல்’ (நெருக்கமாக) அனுப்பட்டுள்ளோம்” என்று கூறியவாறு தமது சுட்டுவிரலையும் நடுவிரலையும் இணைத்துக் காட்டி னார்கள்.70 அத்தியாயம் :
Sahih al-Bukhari · 5302 · Tamil
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘மாதம் என்பது இப்படியும், இப்படியும், இப்படியும் இருக்கும்” என்று (இரு கைகளையும் மும்முறை விரித்துக் காட்டி) -முப்பது நாள் எனச்- சொல்லிவிட்டு, பிறகு ‘‘மேலும் இப்படியும், இப்படியும், இப்படியும் இருக்கலாம்” (என்று இரு…
Sahih al-Bukhari · 5303 · Tamil
அபூமஸ்ஊத் உக்பா பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தமது கரத்தால் யமன் நாட்டுத் திசையைக் காட்டி சைகை செய்து ‘‘இறைநம்பிக்கை அங்குள்ள (யமனைச் சார்ந்த)தாகும்” என்று இரு முறை கூறிவிட்டு, ‘‘அறிந்துகொள்ளுங்கள்! கல் மனமும் (இரக்கமற்ற) கடின சுபாவமும் (பாலைவன) ஒட்டக…
Sahih al-Bukhari · 5304 · Tamil
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்” என்று கூறியபடி தம் சுட்டுவிரலையும் நடுவிரலையும் இணைத்து அந்த இரண்டுக்குமிடையே சற்று இடைவெளி விட்டு சைகை செய்தார்கள். அத்தியாயம் :
Sahih al-Bukhari · 5305 · Tamil
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (கிராமவாசியான) ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! (வெள்ளை நிறமுடைய) எனக்குக் கறுப்பு நிறத்தில் ஒரு மகன் பிறந்துள்ளான்! (அவன் எப்படி எனக்குப் பிறந்தவனாக இருக்க முடியும்?)” என்று (சாடையாகக்) கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘உன்னிடம்…
Sahih al-Bukhari · 5306 · Tamil
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்சாரிகளில் ஒருவர் தம் மனைவி மீது விபசாரக் குற்றம் சாட்டினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தம்பதி யராகிய) அவ்விருவரையும் சத்தியம் செய்ய வைத்தார்கள். பிறகு, அவர்கள் இருவரையும் பிரித்துவைத்தார்கள்.74 அத்தியாயம் :
Sahih al-Bukhari · 5307 · Tamil
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹிலால் பின் உமய்யா (ரலி) அவர்கள் தம் மனைவிமீது (விபசாரக்) குற்றம் சாட்டினார்கள். எனவே, ஹிலால் அவர்கள் வந்து (தாம் சொன்னது உண்மையே என நான்கு முறை சத்தியம் செய்து) சாட்சியமளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் இருவரில்…
Sahih al-Bukhari · 5308 · Tamil
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: உவைமிர் அல்அஜ்லானீ (ரலி) அவர்கள் ஆஸிம் பின் அதீ அல்அன்சாரீ (ரலி) அவர்களிடம் வந்து, ‘‘ஆஸிமே! ஒரு மனிதன் தன் மனைவியுடன் அந்நிய ஆணொருவன் (தகாத உறவு கொண்டபடி) இருப்பதைக் கண்டால், அவனை இந்த மனிதன் கொன்றுவிடலாமா? அவ்வாறு…
Sahih al-Bukhari · 5309 · Tamil
பனூ சாஇதா குலத்தைச் சேர்ந்த சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்சாரிகளில் (உவைமிர் என்றழைக் கப்பட்ட) ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! சொல்லுங்கள்: ஒரு மனிதன் தன் மனைவியுடன் வேறொரு (அந்நிய) ஆடவன் (தகாத உறவு கொண்ட நிலையில்)…