Sahih al-Bukhari · 4410 · Tamil
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் “ஹஜ்—த்துல் வதா'வின்போது (ஹஜ் வழிபாடுகளை நிறைவு செய்தபின்) தம் தலையை மழித்துக்கொண்டார்கள்.447 அத்தியாயம் :
Read something that stays with you.
The first of the two Sahihs — revelation, belief, prayer, knowledge and manners.
Readings 4411–4440 of 7,580
Page 148
Sahih al-Bukhari · 4410 · Tamil
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் “ஹஜ்—த்துல் வதா'வின்போது (ஹஜ் வழிபாடுகளை நிறைவு செய்தபின்) தம் தலையை மழித்துக்கொண்டார்கள்.447 அத்தியாயம் :
Sahih al-Bukhari · 4411 · Tamil
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களில் சிலரும் விடைபெறும் ஹஜ்ஜின்போது (ஹஜ் வழிபாடுகளை நிறைவு செய்தபின்) தம் தலையை மழித்துக்கொண்டார்கள். (தோழர்கள்) சிலர் தம் தலைமுடியைக் குறைத்துக் கொண்டார்கள்.448 அத்தியாயம் :
Sahih al-Bukhari · 4412 · Tamil
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: விடைபெறும் ஹஜ்ஜின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மினாவில் மக்களுக்குத் தொழுவித்தபடி நின்றுகொண்டிருந்தபோது, கழுதை யொன்றில் பயணித்தபடி நான் அவர் களை நோக்கிச் சென்றேன். (எனது) அந்தக் கழுதை (தொழுகையாளிகளின்) ஓரணியில் ஒரு பகுதிக்கு முன்னால் நடந்து சென்றது.…
Sahih al-Bukhari · 4413 · Tamil
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களுடன் நான் இருந்துகொண்டிருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்ட ஹஜ் பயணத்தின் வேகத்தைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “(அவர்களின் பயண வேகம்) நடுநிலையானதாய் இருந்தது. (மக்கள் நெரிசல் இல்லாத) விசாலமான இடம்…
Sahih al-Bukhari · 4414 · Tamil
அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் விடைபெறும் ஹஜ்ஜின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (முஸ்தலிஃபாவில்) மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதேன்.451 அத்தியாயம் :
Sahih al-Bukhari · 4415 · Tamil
அபூமூசா (ரலி) அவர்கள் கூறிய தாவது: என் நண்பர்கள் என்னை அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, தமக்காக (பயண) வாகனம் கேட்கும்படி அனுப்பினார்கள். அப்போது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் உஸ்ரா (போரின்) படையுடன் செல்லவிருந்தனர்- உஸ்ரா போரே தபூக் போராகும்-…
Sahih al-Bukhari · 4416 · Tamil
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தபூக் போருக்குப் புறப்பட்டார்கள். (மனைவி மக்களைக் கவனித்துக்கொள்வதற்காக மதீனாவில்) அலீ (ரலி) அவர்களை (தாம் திரும்பிவரும்வரை தமக்கு)ப் பிரதிநிதியாக நியமித்தார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள், “குழந்தைகளையும் பெண்களையும் கவனித்துக்கொள்வதற் காகவா என்னை…
Sahih al-Bukhari · 4417 · Tamil
யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் சிரம(ப் போரான தபூக்) யுத்தத்தில் கலந்து கொண்டேன். என் செயல்களிலேயே அந்தப் அறப்போர்தான் என்னிடம் மிக உறுதி வாய்ந்ததாகும். என்னிடம் கூலித் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவர் ஒரு மனிதரிடம் சண்டையிட்டார். அந்த…
Sahih al-Bukhari · 4418 · Tamil
கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: தபூக் போரைத் தவிர, நபி (ஸல்) அவர்கள் புரிந்த எந்தப் போரிலும் நான் கலந்துகொள்ளாமல் இருந்ததில்லை. தவிரவும் நான் பத்ர் போரிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் பத்ரில் கலந்துகொள்ளாத எவரும் (அல்லாஹ்வால்) கண்டிக்கப்படவில்லை. (ஏனெனில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்)…
Sahih al-Bukhari · 4419 · Tamil
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் “அல்ஹிஜ்ர்' பிரதேசத்தைக் கடந்து சென்றபோது, “தமக்குத்தாமே அநீதியிழைத்துக் கொண்டவர்களின் வசிப்பிடங்களில் நுழையும்போது (இறைத் தண்டனையாக) அவர்களைத் தீண்டிய வேதனை, நம்மையும் தீண்டிவிடுமோ எனும் அச்சத்துடன் அழுதுகொண்டு நுழைவதைத் தவிர வேறு விதமாக நுழையாதீர்கள்” என்று சொன்னார்கள்.…
Sahih al-Bukhari · 4420 · Tamil
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹிஜ்ர்வாசிகளைக் குறித்து, “இவர்களைத் தீண்டியதைப் போன்ற அதே வேதனை நம்மையும் தீண்டிவிடுமோ என்று அஞ்சி அழுதபடியே அல்லாமல் வேறு முறையில், வேதனை செய்யப்பட்ட இந்த மக்களின் (வசிப்பிடங்கள்) வழியாகச் செல்லாதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்) கூறினார்கள்.463…
Sahih al-Bukhari · 4421 · Tamil
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தம் (இயற்கைத்) தேவைக்காகச் சென்றார்கள். அவர்களின் தேவை முடிந்ததும் நான் அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றுவதற்காக எழுந்தேன். நபி (ஸல்) அவர்கள் தமது முகத்தைக் கழுவினார்கள். தம் முழங்கைகள் இரண்டையும் அவர்கள் கழுவப்போனபோது அவர்களது (மேலங்கியின்)…
Sahih al-Bukhari · 4422 · Tamil
அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தபூக் போரிலிருந்து (திரும்பி மதீனாவை) முன்னோக்கிச் சென்றோம். நாங்கள் மதீனாவை நெருங்கியபோது அவர்கள், “இது “தாபா' (தூய்மையானது) ஆகும். இதோ இந்த உஹுத் மலை நம்மை நேசிக்கின்றது; நாமும் அதை நேசிக்கின்றோம்” என்று சொன்னார்கள்.464…
Sahih al-Bukhari · 4423 · Tamil
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தபூக் போரிலிருந்து திரும்பி (வருகையில்) மதீனாவை நெருங்கியபோது, “மதீனாவில்மக்கள் சிலர் இருக்கின்றனர். (அவர்களால் உங்களுடன் அறப்போரில் கலந்துகொள்ள முடியாவிட்டாலும்) நீங்கள் செல்லும் பாதை, அல்லது நீங்கள் கடந்து செல்லும் பள்ளத்தாக்கு எதுவாயினும் அவர்களும்…
Sahih al-Bukhari · 4424 · Tamil
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பாரசீக மன்னர் “குஸ்ரூ' எனும்) கிஸ்ராவுக்குத் தாம் எழுதிய கடிதத்தை அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ (ரலி) அவர்களிடம் கொடுத்து, (அதை கிஸ்ராவிடம் கொடுத்துவிடச் சொல்லி) பஹ்ரைனின் ஆளுநரிடம் ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிட்டு அனுப்பினார்கள்.467…
Sahih al-Bukhari · 4425 · Tamil
அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறிய தாவது: ஜமல் போர் சமயத்தில், அதில் ஈடுபட்டவர்களுடன் நானும் சேர்ந்து கொண்டு (ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஆதரவாகப்) போரிட முற்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிட மிருந்து நான் செவியுற்றிருந்த ஒரு சொல் மூலம் அல்லாஹ் எனக்குப் பயனளித்தான். பாரசீகர்கள் கிஸ்ராவின்…
Sahih al-Bukhari · 4426 · Tamil
சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (தபூக் போரிலிருந்து திரும்பி வந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை எதிர்கொண்டு வரவேற்பதற்காக “வதா' மலைக் குன்றுக்கு சிறுவர்களுடன் சென்றதை நினைவுகூர்கின்றேன். அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (“சிறுவர்கள்' என்பதைக் குறிக்க “ஃகில்மான்'…
Sahih al-Bukhari · 4427 · Tamil
சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தபூக் போரிலிருந்து வந்தபோது, அவர்களை வழியிலேயே சந்தித்து வரவேற்க சிறுவர்களுடன் சேர்ந்து நான் “வதா' மலைக் குன்றுக்குச் சென்றதை (இப்போது) நினைவுகூர்கின்றேன்.470 அத்தியாயம் :
Sahih al-Bukhari · 4428 · Tamil
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த நோயின் போது, “ஆயிஷாவே! கைபரில் (யூதப் பெண்ணொருத்தியால் விஷம் கலந்து தரப்பட்ட) அந்த உணவை நான் உண்டதால் ஏற்பட்ட வேதனையை நான் தொடர்ந்து அனுபவித்துவருகிறேன்.472 அந்த விஷத்தின் காரணத்தால் என்…
Sahih al-Bukhari · 4429 · Tamil
உம்முல் ஃபள்ல் பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (தம் வாழ்நாளில் இறுதியாகத் தொழுத) மஃக்ரிப் தொழுகை யில், “வல்முர்சலாத்தி உர்ஃபன்' எனும் (குர்ஆனின் 77ஆவது) அத்தியாயத்தை ஓதுவதைச் செவியுற்றேன். அதன் பிறகு அவர்களின் உயிரை அல்லாஹ் கைப்பற்றும்வரை அவர்கள் எங்களுக்குத் தொழுவிக்கவில்லை.473…
Sahih al-Bukhari · 4430 · Tamil
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், என்னைத் தமக்கு அருகிலேயே (எப்போதும்) அமர்த்திக்கொள்வது வழக்கம். ஆகவே, (ஒருநாள்) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், “எங்களுக்கு இப்னு அப்பாஸைப் போன்ற (வயது ஒத்த) பிள்ளைகள்…
Sahih al-Bukhari · 4431 · Tamil
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “(அன்று) வியாழக்கிழமை! எந்த வியாழக்கிழமை (தெரியுமா?)” என்று கேட்டுவிட்டுச் சொன்னார்கள்: (வியாழக்கிழமையன்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது (நோயின்) வேதனை கடுமையாயிற்று. அப்போது அவர்கள், “என்னிடம் (எலும்பைக்) கொண்டுவாருங்கள். உங்களுக்கு ஒரு…
Sahih al-Bukhari · 4432 · Tamil
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது வீட்டில் மக்கள் பலரும் இருக்க, அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்ட போது நபி (ஸல்) அவர்கள், “வாருங்கள். நான் உங்களுக்கு ஒரு மடலை எழுதித் தருகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழிதவறமாட்டீர்கள்” என்று…
Sahih al-Bukhari · 4433 · Tamil
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், எந்த நோயில் இருக்கையில் அவர்களின் உயிர் கைப்பற் றப்பட்டதோ அந்த நோயின்போது (தம் புதல்வி) ஃபாத்திமா (ரலி) அவர்களை அழைத்து (அவர்களது காதில்) இரகசியமாக ஏதோ சொல்ல, ஃபாத்திமா (ரலி) அவர்கள் அழுதார்கள். பிறகு (மீண்டும்) அவர்களை…
Sahih al-Bukhari · 4434 · Tamil
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், எந்த நோயில் இருக்கையில் அவர்களின் உயிர் கைப்பற் றப்பட்டதோ அந்த நோயின்போது (தம் புதல்வி) ஃபாத்திமா (ரலி) அவர்களை அழைத்து (அவர்களது காதில்) இரகசியமாக ஏதோ சொல்ல, ஃபாத்திமா (ரலி) அவர்கள் அழுதார்கள். பிறகு (மீண்டும்) அவர்களை…
Sahih al-Bukhari · 4435 · Tamil
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: “உலக வாழ்வு, மறுமை வாழ்வு ஆகிய இரண்டில், தாம் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாமல் எந்த இறைத்தூதரும் இறப்பதில்லை” என்று நான் (நபி (ஸல்) அவர்களிடமிருந்தே) செவியுற்றிருந்தேன். நபி (ஸல்) அவர்கள், எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது அவர்களின்…
Sahih al-Bukhari · 4436 · Tamil
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த நோயின் போது, “(இறைவா!) உயர்ந்த தோழர்க(ளான இறைத்தூதர்கள், உண்மையாளர்கள், உயிர்த்தியாகிகள் மற்றும் நல்லடியார்க)ளுடன் (என்னைச் சேர்த்தருள்)” என்று சொல்லத் தொடங்கினார்கள். அத்தியாயம் :
Sahih al-Bukhari · 4437 · Tamil
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆரோக்கியமானவர்களாக இருந்தபோது, “சொர்க்கத்தில் தமது இருப்பிடத்தைப் பார்த்து, பிறகு (இன்னும் சில காலம்) உயிர் வாழ்வதற்கு வாய்ப்பளிக்கப்படாத வரை' அல்லது “(உலக வாழ்வு, மறுமை ஆகிய இரண்டில் ஒன்றைத்) தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாதவரை'…
Sahih al-Bukhari · 4438 · Tamil
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது நான் நபி (ஸல்) அவர்களை என் நெஞ்சின் மீது சாய்த்து அணைத்துக்கொண்டிருந்தேன். அப்துர் ரஹ்மானுடன், அவர் பல் துலக்கும் ஈரமான (பேரீச்சங்)குச்சி இருந்தது.…
Sahih al-Bukhari · 4439 · Tamil
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டுவிட்டால் பாதுகாப்புக் கோரும் வசனங்களை(க் கொண்ட குர்ஆனின் கடைசி மூன்று அத்தியாயங்களை) ஓதித் தம்மீது ஊதி, தமது கையை (தம் உடல்மீது) தடவிக்கொள்வார்கள்.479 நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த நோயின் போது,…