Sahih al-Bukhari · 3871 · Tamil
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்கள் காலத்தில்) சந்தி ரன் (இரு துண்டுகளாகப்) பிளவுபட்டது. அத்தியாயம் :
Read something that stays with you.
The first of the two Sahihs — revelation, belief, prayer, knowledge and manners.
Readings 3871–3900 of 7,580
Page 130
Sahih al-Bukhari · 3871 · Tamil
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்கள் காலத்தில்) சந்தி ரன் (இரு துண்டுகளாகப்) பிளவுபட்டது. அத்தியாயம் :
Sahih al-Bukhari · 3872 · Tamil
உபைதுல்லாஹ் பின் அதீ பின் அல்கியார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்களும் அப்துர் ரஹ்மான் பின் அஸ்வத் பின் அப்தி யகூஸ் (ரஹ்) அவர்களும் என்னிடம், “நீங்கள் உங்களுடைய (குலவழி) மாமா உஸ்மான் (ரலி) அவர்களி டம், அவர்களுடைய தாய்வழிச் சகோதரர்…
Sahih al-Bukhari · 3873 · Tamil
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: உம்மு ஹபீபா (ரலி) அவர்களும் உம்மு சலமா (ரலி) அவர்களும் அபிசீனியாவில் தாம் பார்த்த உருவப் படங்கள் கொண்ட ஒரு கிறித்தவ ஆலயத்தைக் குறித்து (என்னிடம்) பேசினார்கள்.118 மேலும், அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களிடம் (அதைப் பற்றிக்) கூறினார்கள். அதற்கு…
Sahih al-Bukhari · 3874 · Tamil
உம்மு காலித் பின்த் காலித் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் சிறுமியாக இருந்தபோது (என் தந்தையுடன்) அபிசீனியா நாட்டிலிருந்து (நபியவர்களிடம்) வந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்குப் பட்டுத் துணி ஒன்றை உடுத்தக் கொடுத்தார்கள். அதில் அடையாளக் குறிகள் சில இருந்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்)…
Sahih al-Bukhari · 3875 · Tamil
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருக்கும்போது நாங்கள் அவர்களுக்கு சலாம் சொல்லுவோம். உடனே அவர்கள் எங்களுக்குப் பதில் சலாம் சொல்வார்கள். நாங்கள் (அபிசீனிய மன்னர்) நஜாஷீ யிடமிருந்து திரும்பி வந்தபோது நபி (ஸல்) அவர்களுக்கு (அவர்கள் தொழுகை யிலிருக்கும்போது) சலாம்…
Sahih al-Bukhari · 3876 · Tamil
அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் யமன் நாட்டில் இருந்தபோது நபி (ஸல்) அவர்கள் (ஹிஜ்ரத் செய்து மக்காவிலிருந்து) வெளியேறிய செய்தி எங்களுக்கு எட்டியது. உடனே நாங்கள் ஒரு கப்பலில் ஏறிப் பயணம் புறப்பட்டோம். எங்கள் கப்பல் (திசைமாறி) எங்களை அபிசீனியாவில் மன்னர் நஜாஷீ அவர்களிடம் கொண்டு(போய்…
Sahih al-Bukhari · 3877 · Tamil
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறிய தாவது: (மன்னர்) நஜாஷீ இறந்தபோது நபி (ஸல்) அவர்கள், “இன்று (ஒரு) நல்ல மனிதர் இறந்துவிட்டார். ஆகவே, எழுந்து நின்று உங்கள் சகோதரர் “அஸ்ஹமா'வுக்காக (ஃகாயிப் ஜனாஸா தொழுகை) தொழுங் கள்” என்று சொன்னார்கள்.124 அத்தியாயம் :
Sahih al-Bukhari · 3878 · Tamil
ஜாபிர் பின் அப்தில்லாஹ் அல் அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (அபிசீனிய மன்னர்) நஜாஷீ (இறந்துவிட்டபோது) அவருக்காக (ஃகாயிப் ஜனாஸா) தொழுகை தொழுதார்கள். நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னே வரிசையாக நின்றுகொண்டோம். நான் இரண்டாவது வரிசையில், அல்லது மூன்றாவது வரிசையில் இருந்தேன்.125…
Sahih al-Bukhari · 3879 · Tamil
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் “அஸ்ஹமா' அந் நஜாஷீக்காக (ஃகாயிப்) ஜனாஸா தொழுகை தொழுதார்கள். அப்போது அவர்மீதான தொழுகையில் நான்கு தக்பீர்கள் கூறினார்கள்.126 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Sahih al-Bukhari · 3880 · Tamil
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபிசீனியாவின் அதிபர் நஜாஷீ அவர்கள் இறந்துவிட்ட செய்தியை அவர் இறந்த நாளன்றே எங்களுக்கு அறிவித்தார்கள். மேலும், “உங்கள் சகோதரருக்காகப் பாவமன்னிப்புக் கோருங்கள்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
Sahih al-Bukhari · 3881 · Tamil
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை (ஜனாஸா தொழுகை) தொழு மிடத்தில் வரிசையாக நிற்கவைத்துநஜாஷீக்காக ஜனாஸா தொழுகை தொழு (வித்)தார்கள்; (அதில்) நான்கு தக்பீர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
Sahih al-Bukhari · 3882 · Tamil
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுனைன் போருக்குச் செல்ல விரும்பிய போது, “நாளை நாம் (போருக்காக) முகாமிடப்போகும் இடம் - இறைவன் நாடினால் - “பனூ கினானா' குலத்தாரின் (முஹஸ்ஸப்) பள்ளத்தாக்காகும். அது அவர்கள், “நாங்கள் இறைமறுப்பில் நிலைத்திருப்போம்” என்று சூளுரைத்த…
Sahih al-Bukhari · 3883 · Tamil
அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (ஒருமுறை) நபி (ஸல்) அவர்களிடம், “உங்கள் தந்தையின் சகோதரருக்கு (அபூதாலிபுக்கு, அவர் செய்த உதவிகளுக் குக் கைமாறாக) நீங்கள் என்ன பயனை அளித்தீர்கள்? ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக, அவர் உங்களை (எதிரி களின் தாக்குதலிலிருந்து) பாதுகாப்ப…
Sahih al-Bukhari · 3884 · Tamil
முசய்யப் பின் ஹஸ்ன் பின் அபீவஹ்ப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூதாலிப் அவர்களுக்கு மரண வேளை வந்துவிட்டபோது நபி (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அப்போது அபூஜஹ்ல் அவரருகே இருந்தான். நபி (ஸல்) அவர்கள், “என் தந்தையின் சகோதரரே! “லா இலாஹ இல்லல்லாஹ்' (அல்லாஹ்வைத் தவிர வேறு…
Sahih al-Bukhari · 3885 · Tamil
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் அவர்களுடைய தந்தையின் சகோதரர் அபூதாலிப் அவர்களைப் பற்றிக் கூறப்பட்டபோது அவர்கள், “அவருக்கு என் பரிந்துரை மறுமை நாளில் பயனளிக்கக்கூடும்; (அதனால்) நரக நெருப்பு அவரது (முழு உடலையும் தீண்டாமல்) கணுக்கால்கள்வரை மட்டுமே தீண்டும்படி ஆக்கப்படலாம். (ஆனால்)…
Sahih al-Bukhari · 3886 · Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நான் இரவின் சிறு பகுதியில் கஅபாவிலிருந்து பைத்துல் மக்திஸ்வரை சென்றதாகச் சொன்ன சமயம்) என்னை குறைஷியர் நம்ப மறுத்தபோது நான் கஅபாவின் “ஹிஜ்ர்' என்னும் (வளைந்த) பகுதியில் நின்றேன். அல்லாஹ் எனக்கு பைத்துல் மக்திஸைக் காட்சியளிக்கச் செய்தான். அப்போது அதைப்…
Sahih al-Bukhari · 3887 · Tamil
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் (இறையில்லம் கஅபா அருகில்) “ஹத்தீமில்' அல்லது “ஹிஜ்ரில்' படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் ஒருவர் (வானவர் ஜிப்ரீல்) வந்து (என் நெஞ்சைப்) பிளந்தார். -அறிவிப்பாளர்களில் ஒருவரான அனஸ் (ரலி) அவர்கள், “இங்கிருந்து இது வரையில் அவர் பிளந்தார்” என்று நபி…
Sahih al-Bukhari · 3888 · Tamil
இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “(நபியே! இப்போது) நாம் உங்களுக்குக் காட்டிய (அந்த இரவுக்) காட்சியையும், குர்ஆனில் சபிக்கப்பட்டுள்ள மரத்தையும் (இந்த) மக்களுக்கு ஒரு சோதனையாகவே ஆக்கியுள்ளோம்” என்ற (17:60) இறைவசனத்திற்கு விளக்கம் அளித்தபோது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்…
Sahih al-Bukhari · 3889 · Tamil
அப்துர் ரஹ்மான் பின் அப்தில் லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் கூறிய தாவது: கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் (முதுமையடைந்து) கண்பார்வையிழந்து விட்டபோது அவர்களைக் கரம் பிடித்து அழைத்துச் செல்பவர்களாயிருந்த (அவர்களின் மகனும் என் தந்தையுமான) அப்துல்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் என்னிடம்…
Sahih al-Bukhari · 3890 · Tamil
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் இரு மாமன்மார்களும் அல்அகபா உடன்படிக்கையில் கலந்துகொண்டனர். சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், “அந்த இருவரில் ஒருவர் பராஉ பின் மஅரூர் (ரலி) அவர்களாவார்”139 என்று சொன்னார் என அபூஅப்தில்லாஹ் புகாரீயாகிய நான் கூறுகிறேன். அத்தியாயம் :
Sahih al-Bukhari · 3891 · Tamil
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்அகபா உடன்படிக்கையில் கலந்துகொண்டவர்களில் நானும், என் தந்தையும், என் இரு தாய்மாமன்மார்களும் அடங்குவோம். அத்தியாயம் :
Sahih al-Bukhari · 3892 · Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பத்ர் போரில் கலந்து கொண்டவரும், இரவில் நடந்த “அல்அகபா' உடன்பாட்டில் கலந்துகொண்ட நபித் தோழர்களில் ஒருவருமான உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது: (அல்அகபா இரவில்) தம்மைச் சுற்றிலும் தம் தோழர்களின் ஒரு குழுவினர் அமர்ந்திருக்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்)…
Sahih al-Bukhari · 3893 · Tamil
உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம் உறுதிமொழி கொடுத்த (மதீனாவின்) தலைவர்களில் நானும் ஒருவனாவேன். நாங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்கமாட்டோம் என்றும், திருடமாட்டோம் என்றும், விபசாரம் புரியமாட்டோம் என்றும், அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள (மனித) உயிரை நியாயமின்றிக் கொல்லமாட்டோம்…
Sahih al-Bukhari · 3894 · Tamil
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஆறு வயதுடையவளாக இருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னை மணந்துகொண்டார்கள். பிறகு நாங்கள் மதீனா வந்து ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குலத்தாரிடம் தங்கினோம். எனக்குக் காய்ச்சல் கண்டுவிடவே என் முடிகள் உதிர்ந்து விழுந்தன. பிறகு (என்) முடி வளர்ந்து அதிகமாகிவிட்டது.…
Sahih al-Bukhari · 3895 · Tamil
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: “நான் உன்னைக் கனவில் இருமுறை கண்டேன். உன்னைப் பட்டுத் (துணியின்) துண்டு ஒன்றில் (முக்காடிட்டபடி) கண் டேன். எவரோ, “இது உங்கள் மனைவிதான்; (முக்காட்டை) நீக்கிப் பாருங்கள்' என்று கூற, (நானும் அவ்வாறே பார்த்தேன்.) அது நீயாகவே இருக்கக் கண்டேன். அப்போது…
Sahih al-Bukhari · 3896 · Tamil
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு (ஹிஜ்ரத் செய்து) செல்வதற்கு மூன்றாண் டுகளுக்கு முன்பு கதீஜா (ரலி) அவர்கள் இறந்துவிட்டார்கள். (அதன்பின்) நபி (ஸல்) அவர்கள் “இரண்டு ஆண்டுகள்' அல்லது “கிட்டத்தட்ட இரண்டாண்டுகள்' (மக்காவில்) தங்கியிருந்தார்கள்; ஆயிஷா (ரலி) அவர்கள்…
Sahih al-Bukhari · 3897 · Tamil
அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்களை உடல்நலம் விசாரிக்கச் சென்றோம். அப்போது அவர்கள் கூறினார்கள்: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அல்லாஹ்வின் அன்பை நாடியவர்களாகப் புலம்பெயர்ந்து (ஹிஜ்ரத்) சென்றோம். எங்களுக்கு (அதற்கான) பிரதிபலனையளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகிவிட்டது. எங்களில் ஹிஜ்ரத் செய்ததற்கான…
Sahih al-Bukhari · 3898 · Tamil
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எண்ணத்தைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன. ஒருவரது ஹிஜ்ரத் அவர் அடையவிருக்கும் உலக (ஆதாய)த்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால், அல்லது அவர் மணக்கவிருக்கும் ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டிருந்தால், அவரது ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும். ஒருவரது ஹிஜ்ரத் அல்லாஹ்வையும் அவனுடைய…
Sahih al-Bukhari · 3899 · Tamil
முஜாஹித் பின் ஜப்ர் அல்மக்கீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “(மக்கா) வெற்றிக்குப் பிறகு ஹிஜ்ரத் கிடையாது” என்று சொல்லி வந்தார்கள்.147 அத்தியாயம் :
Sahih al-Bukhari · 3900 · Tamil
அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் உபைத் பின் உமைர் அல்லைஸீ (ரஹ்) அவர்களுடன் ஆயிஷா (ரலி) அவர்களைச் சந்தித்தேன். (அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் “ஸபீர்' எனும் மலைக்கருகில் தங்கியிருந்தார்கள்.)148 அவர்களிடம் ஹிஜ்ரத்தைப் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள், “இன்று (மக்கா வெற்றி…